பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட் போட்டி ஒத்திவைப்பு

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குறித்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button