இதயம் இல்லாமல் 555 நாட்கள் வாழ்ந்த வாலிபர்!

ம் உடலில் கை, கால், மூளை, நுரையீரல் முதலான அனைத்து உறுப்புகளுக்குமே ஒரே சீராக ரத்தத்தை உந்தித்தள்ளி, நம்மை இயக்கி வரும் இயந்திரமே இதயம்தான். இதயம் இல்லாமல் நம்மால் சில நொடிகள், ஏன் ஒரு நொடிகூட இயங்க முடியாது. ஆனால், Stan Larkin அப்படி இல்லை!

மிச்சிகனைச் (Michigan) சேர்ந்த லார்கினுக்கு 16 வயது இருக்கும் போது, அவருக்கு ARVD (arrhythmogenic right ventricular dysplasia) என்னும் இதய நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இவரது இதயத்துடிப்பு ஒழுங்கற்றதாக இருந்தது. இது மிகவும் ஆபத்தானது என்ற காரணத்தினால், இவரது உடலில் இதயத்துடிப்பைச் சீராக்க ஒரு அதிர்வு கருவி பொருத்தப்பட்டது. இதனால் இவர் அதிகமான வேலைகளைச் செய்ய முடியாமல் போனது.

இத்துடன் விதி,  தன் விளையாட்டை நிறுத்தவில்லை. ஏப்ரல் 2012 ல், லார்கினின் இதயம் சுத்தமாக செயலிழந்தது. ஏற்கெனவே இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக, பொருத்தமான இதயத்திற்காகக் காத்திருந்த நூற்றுக்கணக்கானவரோடு, இவரும் காத்திருந்தார். USA வில் இதயத்திற்காக காத்திருந்தவர்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 22 பேர் மரணத்தைத் தழுவினார்கள்.

இவரது உடல் செயலிழந்து கொண்டு வருவதை உணர்ந்த மருத்துவர்கள், நவம்பர் 2014 ல் இவரது இதயத்தை அகற்றிவிட்டு ‘Big Blue’  என்ற  இயந்திரத்தைப் பொருத்தினார்கள். இந்த இயந்திரம் இவர் ரத்தத்தை சீராக உந்தித்தள்ளி, உயிர்வாழச் செய்தது. ஆனால் படுத்த படுக்கையாக இருந்தார். பிறகு, Freedom portable என்னும் இயந்திரத்தைப் பொருத்தினார்கள். இதை ஒரு பேக்கினுள் வைத்து விடலாம். அவ்வளவு சிறியது.

இதுகுறித்து லார்கின் கூறுகையில், “இது நிஜ இதயத்தைப் போன்றதுதான். என்ன… நம் உடலினுள் சில குழாய்கள் சென்று வரும். மற்றபடி நிஜ இதயத்தைப் போலத்தான் இருக்கும். பள்ளிக்குச் செல்லும் போது அணியும் பேக் போலத்தான் அணிந்து இருந்தேன்!”

லார்கின் 24×7 அந்த பையை அணிந்து இருந்தார். இவரது தினசரி வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதை அணிந்து கொண்டே கூடைப்பந்து விளையாட்டையும் விளையாடியுள்ளார். பிறகு, மே 2016 ல் 555 நாட்களுக்குப் பிறகு இவருக்கு இதயம் பொருத்தப்பட்டது.

இவரது தம்பி Domonique க்கும் இதே நோய் ஏற்பட்டுள்ளது. இது ஒரு பரம்பரை நோய். Domonique வின் மூன்றில் இரண்டு குழந்தைகளும் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். ஆனால் லார்கினை போன்றே  Domonique ம் இதயம் பொருத்தப்பட்டு வாழ்ந்து வருகிறார்.  “இது தங்களுக்கு ஒரு மறுவாழ்வு!” என இரு சகோதரர்களும் வியக்கின்றனர்!

 

Related Articles

Leave a Reply

Back to top button