பளையில் துப்பாக்கி சூடு – இளைஞன் பலி.

இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் பளை, கெற்பலியைச் சேர்ந்த திரவியம் இராமலிங்கம் (வயது -24) என்ற இளைஞனே உயிரிழந்தார்.

முகாமை பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்ட போது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழந்தார் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்

Related Articles

Back to top button