மனித எலும்புகள் 500 ஆண்டுகளாக புதைகுழியில் இருக்குமா?

Story Highlights
  • மிக பெரிய ஒரு மனித புதை குழியினை அமைக்கும் பொழுது மனித உடலினை கை மற்றும் கால் என்பவற்றினை நூலினால் அல்லது கம்பியினால் பிணைத்த பின்னர் தூக்கி உள்ள நோக்கி வீசுவார்கள்

மன்னார் மனித புதை குழி சம்பந்தமான கார்பன் டேட்டிங் ரிப்போர்ட் வெளியாகி பலத்த சர்ச்சையினை கிளம்பியுள்ள நிலையில் பலர் 500 வருட காலமாக மனித எலும்புகள் உக்காமல் இருக்குமா? எலும்பு கூடுகளுடன் உலோகங்கள் 500வருடகாலமாக உக்காமல் இருக்குமா? என்பது பற்றி மூளையினை கசக்கி பிழிந்தவண்ணம் உள்ளனர். மனிதன் இறந்த பின்பு மண்ணில் புதைக்கப்பட்டால்  அவனது எலும்பு கூடுகளுக்கு என்ன நிகழும் என்பது பற்றிய படிப்பே FORENSIC TAPHONOMY ( Forensic taphonomy is the study of these postmortem changes to human remains caused by soil, water, and the interaction with plants, insects, and other animals)

சாதாரணமாக புதைக்கப்பட்ட மனித உடலானது மண்ணுடனும், மண்ணில் உள்ள நீருடனும் அல்லது நீர் நிலைகளில் உள்ள நீருடனும், மண்ணில் உள்ள உரினங்களுடனும் மண்ணில் மேல் உயிர் வாழும் தாவரங்களுடனும் இடைத்தாக்கமடையும். இவ்வாறு இடைத்தாக்கமடைந்து படிப்படியாக உக்கி அழிவடையும். மனிதனோடு கூடவே புதைக்க பட்ட உலோகங்கள் மற்றும் ஏனைய ஆபரனங்களும் இவ்வாறே இடைத்தாக்கமடையும். இவ்வாறு மனித உடல் காலத்துடன் உக்கும் வீதம் (decomposition rate) பல்வேறுபட்ட காரணிகளில் தங்கி உள்ளது. அவையாவன எனில்

  • சூழல் காரணிகள் (Environmental factors)
  • மனித காரணிகள் (Human factors) `

சூழல் காரணிகளை எடுத்து கொண்டால் உக்கும் வீதமானது பின்வருவனவற்றில் தங்கி உள்ளது

  1. சூழலின் வெப்பநிலை – அதிக வெப்பநிலையானது உக்கும் வீதத்தினினை அதிகரிக்கும். மாறாக வெப்பநிலை 120F இணை தாண்டும் பொழுது நுண்ணங்கிகளின் தொழில்பாடு இல்லாமல் போவதன் காரணமாக உக்கல் நடைபெறாது. அவ்வாறே 32F இணை விட குறைவாக வரும் பொழுதும் நடைபெறாது.
  2. ஈரப்பதன் (Moisture) – ஈரப்பதன் அதிகமாக இருக்கும் பொழுது மனித உடல் உக்கும் வீதமானது அதிகமாக இருக்கும் காரணம் அதிகரித்த பற்றீரியாக்களின் தொழில்பாடே ஆகும். உதாரணமாக நீரில் இருந்து மீட்கப்படும் உடல் மிக விரைவில் உக்கி பழுதடையும்.
  3. காற்றுக்கு வெளிப்படல் (Expose to air) – உடல் ஆனது காற்றுக்கு வெளிப்பட்டு இருந்தால் மிக விரைவில் உக்கி பழுதடையும். காரணம் பற்றீரியாக்களின் தொழில் பாட்டிற்கு தேவையான அளவு ஓட்ஸிசன் வாயு கிடைக்கின்றமையே ஆகும். இதேவேளை உடனடியாகவே ஆழ் கிடங்குகளில் புதைக்கப்பட்டால் கிடைக்கும்  ஓட்ஸிசன் அளவு குறைவு காரணமாக உக்கும் வீதம் குறைவடையும்.
  4. வெளிப்பட்ட மனித உடல்கள் (Exposed body to environment) – மனித உடலானது சூழலுக்கு வெளிக்காட்ட பட்ட நிலையில் இருக்கும்பொழுது அவை மிருகங்களின் தாக்குதல்களுக்கு மற்றும் இலையான் ஏனைய பூச்சி வகைகளின் தாக்குதலுக்கு உள்ளாகும். இவ்வாறு உள்ளாகும் உடல்கள் வெகுவிரைவில் உக்கி மண்ணாகும்.

பின்வரும் மனித காரணிகள் உக்கும் வீதத்தில் செல்வாக்கு செலுத்தும்

  1. வயது – உடன் பிறந்த குழந்தைகளில் குடலில் நுண்ணங்கிகள் குறைவாக இருப்பதன் காரணமாக அவற்றில் உக்கும் வீதம் குறைவாகவே இருக்கும்.
  2. உடற் பருமன் – பருத்த உடல் கொண்ட நபரின் உடலில் அதிகளவு நீர் காணப்படுவதனால் அவ்வுடல் இலகுவில் உக்கும் . மாறாக மெல்லிய உடல் பருமன் உள்ளவர்களின் உடலில் குறைந்தளவு நீர் காணப்படுவதனால் அவ்வுடல் இலகுவில் உக்காது.
  3. மரணத்திர்கான காரணம் (Cause of dead) – ஒருவர் செப்டிசீமியா போன்ற கிருமித் தொற்றின் காரணமாக இறப்பாராக இருந்தால் அவரின் உடலில் உள்ள கிருமிகள் காரணமாக உடல் விரைவில் உக்கி அழிவடையும். ஒருவர் ஆசனிக்கு மற்றும் பாதரசம் போன்ற நஞ்சு பொருட்களினால் நச்சூட்டப்பட்டு இறப்பாராக இருந்தால் அவரின் குறைந்த வீதத்திலேயே  உக்கி அழிவடையும்.

ஆக மொத்தத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட உடலானது உக்கி அழிவடையத்தான் வேண்டும். ஆனால் அழிவடையும் அல்லது உக்கும் வீதமானது மேற்கூறப்பட்ட பல்வேறு காரணிகளில் தங்கி உள்ளது. அதன்காரணமாகவே சில பிரதேசங்களில் மனித எலும்பு கூடுகள் பல நூற்றான்டுகள் சென்றும் முழுதாக கிடைக்கின்றன. மாறாக சில பிரதேசங்களில் மனித எலும்பு கூடுகள் ஒருசில வருடங்களிலேயே அல்லது மாதங்களிலிலேயே முற்றாக உக்கி அழிவடைந்து விடுகின்றன. இவ்வாறே மனித உடலோடு கூடவே புதைக்க பட்ட உலோகங்களின் இருக்கையும் தீர்மானிக்க படுகின்றது. மேலும் மிக பெரிய ஒரு மனித புதை குழியினை அமைக்கும் பொழுது மனித உடலினை கை மற்றும்  கால் என்பவற்றினை நூலினால் அல்லது கம்பியினால் பிணைத்த பின்னர் தூக்கி உள்ள நோக்கி வீசுவார்கள்.

Source
Tamilforensic

Related Articles

Back to top button