இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த இரண்டு மாதங்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள், ஒரு டி-20 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. இந்த நிலையில், ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வீரர்கள் விவரம்: இயான் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், சாம் கரன், டாம் கரன், லியாம் டாவ்சன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஓலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு விடுதியில் ஏற்பட்ட தகராறில் இளைஞரைத் தாக்கிய விவகாரத்தில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் கடந்த ஆண்டு அணியில் இருந்து அதிரடியாக கழற்றிவிடப்பட்டனர். இவர்கள் மீது கைது நடவடிக்கையும் பாய்ந்தது.

இதன் காரணமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. கிளப் போட்டிகளில் இருவரும் விளையாடி வந்தனர். பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல் தொடரில் விளையாடினார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்திருந்தார். இரவு விடுதியில் இளைஞரைத் தாக்கிய வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றதால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவரால் அதிகப் போட்டிகளில் விளையாடமுடியவில்லை. நீதிமன்றத்தில் அவரைக் குற்றவாளி இல்லை எனக் கூறி தீர்ப்பு அளித்தது. இதன்காரணமாகவே தற்போது இருவரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பிடித்துள்ளனர்.

Related Articles

Back to top button