மழைக்காலத்திற்கு அருமருந்தாகும் வேம்பு!

வேப்பிலை உடலுக்குத் தேவையான அத்தனை மகத்துவங்களையும் கொண்டுள்ளது. இதை ஒரு ‘அதிசய மூலிகை’ என்று கூட சொல்லலாம். முகம், முடி, உடல் என அனைத்திற்கும் தேவையான 130 மூலக் கூறுகள் இதில் உள்ளன. இதை இந்த மழைக் காலத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்பதைப் பார்ப்போம்.

முகம் – இந்த மழைக்காலத்தில் முகத்தில் அதிக சீபம் சுரப்பதால், சருமம் இன்னும் கூட எண்ணெய் தன்மையுடன் இருக்கும். அதனால் வேப்பிலையை அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ், கொப்புளங்கள், எரிச்சல் என எல்லாவற்றையும் இது சரி செய்யும்.

கூந்தல் – இந்த நேரத்தில் உலர்ந்த ஸ்கால்ப்பும், பொடுகுத் தொல்லையும் அதிகம் இருக்கும். காலநிலை மாறுவதால் உங்கள் ஸ்கால்பின் பி.ஹெச் லெவல் மாறும். உங்கள் சருமத்திற்கு ஏற்றபடி முடியும் மாறும். கூந்தல் உதிர்வை கட்டுப் படுத்தி, முடியை வலிமையாக்க வேப்பிலை பயன்படுகிறது.

ரத்த சுத்திகரிப்பு – காலநிலை மாற்றத்தாலும், உணவு முறையாலும் உடலில் கழிவுகள் அதிகரிக்கும். இதை சரி செய்தால், ரத்தம் சுத்திகரிக்கப் படும், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொடர்ச்சியாக வேப்பிலையை உள்ளுக்குள் எடுத்துக் கொண்டால் அதிக ரத்த சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வந்து ரத்த அழுத்தத்தையும் கன்ட்ரோலாக வைத்திருக்கலாம்.

ஜீரணம் – மழைக் காலத்தில் ஜீரண பிரச்னை அதிகமாக இருக்கும். நீர் எளிதில் மாசு படுவதாலும், கொசுக்களாலும் ஃபுட் பாய்ஸனாகும். இதனால் வாந்தி டயேரியா போன்ற பிரச்னைகள் ஏற்படும். சிறிது வேப்பிலையை அரைத்து சிறிய உருண்டையாக உட்கொள்வதால், இந்த பிரச்னை சரி செய்யப் படும்.

Related Articles

Back to top button