இந்த வார ராசிபலன் – July 30th to Aug 5th

மேஷம்

சுறுசுறுப்பு கூடும். சாதனை படைக்க எதிலும் கடுமையான முயற்சி தேவை. பொருளாதார நிலை முன்னேற்றம் காணும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். பேச்சில் கறாராக இருப்பீர்கள். புதிய நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் ஆதாயமும் உண்டு. வாகன செலவுகள் கூடும். மாணவர்கள் கல்வியில் மேம்பட அதிக உழைப்பு அவசியம். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள்  வருத்தம் தரும். குழப்பம் இருக்கும். சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்கள் செயல் வெற்றிக்குத் துணை நிற்கும். நண்பர்களுடனான விவாதங்கள் அனுபவ அறிவை கூட்டும். கூட்டுத் தொழில் தனலாபத்தினைத் தரும். கலைத்துறையினரின் கற்பனைகள் செயல்வடிவம் பெறும். உழைப்பின் பெருமையை உணரும் நேரம் இது.

ரிஷபம்

அனுபவ அறிவினை வளர்த்துக் கொள்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதார நிலை வளர்ச்சியடையும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சொத்துப் பிரச்னைகளில் சுமூக தீர்வு கிடைக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் செயல்களுக்கு துணையாய் அமையும். வாகனங்கள் பயன் தரும். மாணவர்களின் கல்வித் தரம் உயரும். பங்கு பெறும் போட்டிகளிலும் வெற்றி காண்பர். பிள்ளைகளால் கவுரவம் உயரும். மறைமுக எதிரிகளின் பலம் அதிகரிக்கும் என்பதால் சற்று கவனம் அவசியம். உடல்நிலையில் சிரமம் இருக்கும்.  வாழ்க்கைத்துணை உங்கள் வெற்றிக்கு துணை நிற்பார். கலைத்துறையினருக்கு போட்டி அதிகரிக்கும். தொழில்முறையில் தொடர்வெற்றி உண்டு. கூட்டுத் தொழிலில் சற்று கவனம் நல்லது. நற்பலன்களைக் காணும் நேரம் இது.

மிதுனம்

திறமையான பேச்சால் காரிய வெற்றி காண்பீர்கள். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் பணத்தட்டுப்பாடு இருக்காது. குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும். கலைத்துறையினரின் சிறப்பான செயல்பாடுகள் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள். தகவல் தொடர்பு சாதனங்களால் சாதக பாதகங்கள் உண்டு. வாகன ஆதாயம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வித்தரம் உயரும்.  பிள்ளைகளின் செயல்கள் பெருமை தரும். பித்தம், வாந்தி, மயக்க பிரச்னைகளால் உடல்நிலை பாதிக்கப்படக்கூடும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். தொழில்முறையில் வெற்றி உண்டு. மொத்தத்தில் சிறப்பான நற்பலன்களைக் காணும் வாரமாக அமையும்.

கடகம்

சிறப்பான செயல்வெற்றி காண உள்ளீர்கள். மற்றவர்கள் மூலம் செய்யும் காரியங்களை விட நீங்கள் நேரடியாக பங்குபெறும் செயல்கள் உடனடி ஆதாயம் தரும். திறமையான செயல்பாடுகளால் தனலாபம், கவுரவம் உயரும். பொருளாதார நிலை முன்னேற்றம் காணும். நிலுவையில் இருந்த தொகைகள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பேச்சில் நிதானம் இருக்கும். உடன்பிறந்தோர் உங்கள் உதவிக்காக காத்து நிற்பார்கள். வாகனங்களை மாற்றும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக அமையும். பிள்ளைகளின் பிடிவாதம் வருத்தம் தரும். அவர்களது எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கும். உடலில் தசைப்பிடிப்பு சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். தொழில்முறையில் அலைச்சல் கூடும். இதனால் சரியான நேரத்திற்கு உணவும், உறக்கமும் இல்லாமல் போகலாம். கலைத்துறையினர் தனலாபம் காண்பார்கள். நற்பலன்களைக் காணும் வாரம் இது.

சிம்மம்

நினைத்த காரியம் இழுபறி தரக்கூடும். நீங்கள் நல்லது என்று எதைச் செய்தாலும் அது அடுத்தவர்கள் கண்களுக்குத் தவறாக தோன்றலாம் என்பதால் செய்யும் செயல்களில் கூடுதல் கவனம் அவசியம். செலவுகள் அதிகரித்து கையிருப்பு கரையும். குடும்பத்தில் அமைதி நிலவும். நேரத்தை புரிந்து கொண்டு அதிகம் பேசாமல் அமைதி காப்பது நல்லது. உடன்பிறந்தோரை நம்பி இறங்கிய செயல்களில் சுணக்கம் இருக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து போய் சிரமத்திற்கு ஆளாவீர்கள். வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனம் தேவை. ஆராய்ச்சி மாணவர்கள் வெற்றி காண்பார்கள். பொதுக்காரியங்களில் முன் நின்று செயல்படுவீர்கள். பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றும். கலைத்துறையினர் புதிய முயற்சியில் ஈடுபடலாம். அடுத்தவர் செய்யும் தவறுகளினால் உத்யோகத்தில் சிறிது சிரமம் இருக்கும். சுமாரான பலன்களைக் காணும் நேரம் இது.

கன்னி

நினைத்த காரியங்களில் உடனுக்குடன் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேச்சில் நகைச்சுவை வெளிப்படும். விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். உடன்பிறந்தோர் உங்களின் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பர். தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில் ரீதியாக துணை நிற்கும். வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகமாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற கூடுதல் உழைப்பு தேவை. மூட்டு வலி போன்ற பிரச்னைகளால் உடல்நிலையில் சற்று சிரமம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் விருப்பத்தினை நிறைவேற்றுவீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். ஆன்மிகப் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. கலைத்துறையினருக்கு அலைச்சல் கூடும். தொழில்முறையில் நற்பெயரோடு ஆதாயமும் கிடைக்கும். நற்பலன்களை அனுபவிக்கும் வாரமாக அமையும்.

துலாம்

எதிலும் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் முனைப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை தரம் உயரும். புதிய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க விருப்பம் தோன்றும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களின் துணையுடன் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பயனுள்ள வகையில் அமையும். வாகன ஆதாயம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வி நிலை சிறக்கும். பிள்ளைகளின் விருப்பத்தினை நிறைவேற்றி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளால் தொல்லைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு பக்கபலமாக செயல்படுவார். கவுரவ செலவுகள் அதிகரிக்கும். தர்ம சிந்தனைகள் கூடும். தொழிலில் போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினர் தனலாபம் காண்பர். நற்பலன்களைக் காணும் வாரம் இது.

விருச்சிகம்

அனுபவத்தால் சிரமமான சூழலையும் சாதாரணமாக எதிர்கொள்வீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பேச்சில் நிதானம் இருந்தாலும் கருத்துகளை ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்துவீர்கள். உடன் பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள். வாகனங்களை வாங்கும் முயற்சியில் தடை உண்டாகும். மாணவர்களின் கல்வித் தரம் உயரும். பிள்ளைகளின் துணையுடன் குடும்பத்தின் பாரம்பரிய சொத்துக்களை பராமரிப்பீர்கள். கடன் பிரச்னைகளை முடிவிற்கு கொண்டுவரும் முயற்சியில் சேமிப்புகள் கரைய தொடங்கும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். கவுரவ செலவுகள் கூடும். தொழில்முறையில் கடும் அலைச்சல் இருக்கும். கலைத்துறையினர் முழுத்திறமையையும் வெளிப்படுத்த வேண்டியிருக்கும். சுமாரான பலன்களைக் காணும் நேரம் இது.

தனுசு

நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். மனதில் சஞ்சலம் இருக்கும். உங்களது உழைப்பின் பலனை அடுத்தவர்களும், அடுத்தவர்கள் செய்த தவறின் பலனை நீங்களும் அனுபவிக்க நேரிடலாம். அதனால் வருத்தம் குழப்பம் இருக்கும். படிப்படியாக இந்த நிலை மாறும். பொருளாதார நிலையை முன்னேற்ற மிகுந்த சிரமப்பட்டு உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறந்தோர் முக்கியமான நேரத்தில் துணை நிற்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்களில் பழுது உண்டாகும். வாகனங்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளோடு கருத்து வேறுபாடு தோன்றும். ஆன்மிக சிந்தனைகள் மனதை அதிகம் ஆக்கிரமிக்கும். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அந்நிய தேசத்திலிருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழில்முறையில் அதிகப்படியான அலைச்சல் இருக்கும். கலைத்துறையினர் தனலாபம் காண்பர். சரிசம பலனை காணும் வாரம் இது.

மகரம்

தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்திலும் பிடித்தம் குறையும். பொருளாதார நிலையை முன்னேற்ற கடும் முயற்சி தேவை. பேச்சில் கடுமையை குறைத்து கொள்ளவும். குடும்பத்தில் சலசலப்புகள் இருக்கும். உறவினர்களால் குடும்பப் பிரச்னைகள் அதிகரிக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் உழைப்பு தேவை. உடன் பிறந்தோருக்கு உதவும் சூழல் உருவாகும். வாகன கோளாறுகளால் பயணத்தின் போது சிரமத்தை சந்திக்க நேரும். பிள்ளைகளின் செயல்கள் வருத்தம் தரும். காது, மூக்கு, தொண்டை பகுதியில் உபாதைகள் வரலாம். வாழ்க்கைத்துணை உங்களுக்கு தூண்டுகோலாக இருப்பார். பூர்வீக சொத்துகளால் ஆதாயம் காண்பீர்கள். தொழில்முறையில் உங்கள் திட்டங்கள் வெற்றி காணும். கலைத்துறையினர் எதிர்பார்க்கும் லாபத்தில் தடைகளை சந்திக்க நேரிடும். கனவுத் தொல்லைகளினால் நிம்மதியான உறக்கம் கெடும். சரிசம பலன்களைக் காணும் வாரம் இது.

கும்பம்

தனிப்பட்ட செயல்களில் தடை இருக்கும். பொருளாதார நிலையில் சீரான முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பேச்சில் கறாராக இருப்பீர்கள். உடன்பிறந்தோரால் சங்கடத்தை சந்திக்க நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் அடிக்கடி செயலிழந்து சிரமம் தரும். வாகனங்களால் செலவுகள் வரும். பிரயாணத்தின் போது பொருளிழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளதால் எச்சரிக்கை நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையான உழைப்பு அவசியம். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் சற்று அச்சம் தரக்கூடும். உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்துவது நல்லது. கடன் பிரச்சினைகளும், அநாவசியமான வம்பு தும்புகளும் தலையெடுக்க கூடும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். தொழில்முறையில் நற்பெயர் கிடைக்கும். கலைத்துறையினர் உயர்வு காண்பர். ஓய்வேதுமின்றி செயல்பட்டு வெற்றி காண வேண்டிய நேரம் இது.

மீனம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அனுபவ அறிவின் காரணமாக நடைமுறையில் சாத்தியமான விஷயங்களை மட்டுமே எதிர்பார்த்துச் செயல்பட்டு வருவீர்கள். மனதில் தர்ம சிந்தனைகள் அதிகரிக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சீராக இருந்து வரும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பேச்சில் நிதானம் வெளிப்படும். உடன்பிறந்தோரின் செயல்கள் உங்களுக்கு ஏமாற்றம் தரலாம். முக்கியமான விஷயங்களைச் செய்து முடிக்க நேரில் செல்வது நல்லது. திடீர் பிரயாண வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண தீவிர பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. சிந்தனையில் குழப்பம் இருந்தாலும், எதிர்த்துப் போராடும் குணம் உண்டாகும். புதியவர்களின் தொடர்பு கிட்டும். கலைத்துறையினர் புதிய முயற்சியில் ஈடுபடுவா். கூட்டுத்தொழில் லாபம் தரும். வியாபாரிகள் தனலாபம் காண்பார்கள். அவசரப்படாமல் செயல்பட்டால் நன்மை உண்டாகும் நேரம் இது.

Related Articles

Back to top button