சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழர்கள் சாட்சியமளிக்க தயார். யஸ்மின் சூகா – சங்குநாதம் செய்திப்பிரிவு

Yasmin-Sookaலங்கையில் நடந்த யுத்த குற்றங்கள் மற்றும் சித்திரவதை சம்பந்தமான யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சாட்சியமளிப்பதற்கு, சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் இருப்பதோடு தமது அடையாளங்கள் பாதுகாக்கப்படும் எனும் உத்தரவாதம் இருந்தால் மட்டுமே இலங்கையில் நடைபெறவிருக்கும் அத்தகைய‌ விசாரணைகளுக்கு சாட்சியம் அளிக்க‌ போவதாக நாட்டுக்கு வெளியில் வாழும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின்( ITJP ) இயக்குனர் யஸ்மின் சூகா தனது “மறக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேறிய சாட்சிகள்” எனும் புதிய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரம் ஜெனீவாவின் மனித உரிமைப்பேரவையில்;  இடைக்கால நீதியை நிலைநாட்டல் சம்பந்தமான ஐ. நா வின் ஒருமித்த தீர்மானத்தின் பிரகாரம் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விதித்திருந்த காலக்கெடு வின் முன்னேற்றம் பற்றிய மீழாய்வு நடைபெறவிருக்கும் இந்த நேரத்தில், 51 பக்கம் கொண்ட “மறக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேறிய சாட்சிகள்” எனும் இந்த‌ அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

இதில் பலதரப்பட்ட பாதிக்கப்ப்ட்டோரின் நேர்காணல்கள் அறிக்கையாக்கப்பட்டுள்ளதோடு இத்தகைய விசாரணைகள் பூரணப்படுவதற்கு நாட்டை விட்டு தப்பியோடிய ஆயிரக்கணக்கான நேரடி சாட்சிகளையும் கருத்தில் கொள்ளவேண்டுமென யஸ்மின் சூகா வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button