இளைஞர்களின் தற்கொலை முயற்சியை தடுக்க புதிய மென்பொருள்

China launches artificial intelligence to prevent its young people from committing suicideசீனாவில் இளைஞர்களின் தற்கொலை முயற்சியை தடுக்க புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 15 வயது முதல் 34 வயது வரை உள்ள இளைஞர்களின் தற்கொலை அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க சீனா அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது தற்கொலையை தடுக்க புதிய மென்பொருள் ஒன்றை சீனா கண்டுபிடித்துள்ளது.

இந்த செயலியில் தற்கொலை சம்பந்தப்பட்ட விடயங்களையும், மனநிலை பாதிக்கப்பட்ட விடயங்களையும் பதிவு செய்பவர்களுக்கு தானியங்கி முறையில் ஆலோசனை செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக சீனா தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் பயனுக்கு வருவதற்கு சில நாட்கள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button