கோயில் உள்ள ஊரில் குடியிருக்க வேண்டாம்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண் டாம் என்றார் ஔவையார்.
கோயில்கள் இல்லை என்றால் கூட்டுப் பிரார்த்தனை இல்லை. விரதம் இல்லை. ஊர் கூடி தேர் இழுக்கும்  ஒற்றுமையில்லை. இறை சிந்தனை இல்லை.
தவிர, கோயிலை மையமாகக் கொண்டிருந்த கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம், பரதம், மங்கலவாத்தியங்கள், ஆன்மிக சிந்தனைகள், பிரசங்கங்கள், அறவழிகள், தான தர்மங்கள், அன்னதானங்கள், யாக வழிபாடுகள் என எதுவும் இல்லாமல் போய்விடும்.
ஆகையால் நாம் குடியிருக்கும் ஊர்களில் கோயில் இருக்க வேண்டும் என்பது ஔவை யாரின் முடிவு.
இதற்கு அப்பால் மின்னொளி இல்லாத அந் தக் காலத்தில் மக்கள் தங்கள் வீடுகளின் முன்பாக திண்ணைகளில் ஏற்றியிருக்கும் தெரு விளக்குகளே இரவுப் பயணத்துக்கு பேருதவி புரிந்தன.
குடிமனைகள் இல்லாத இடங்களில் வீதி ஓரமாக அடர்ந்து விரிந்து நிற்கும் ஆல், அரசு, வேம்பு இவற்றின் கீழ் கற்கள், சூலங்களை வைத்து வீதியால் போய்வருவோர் இறைவா என்று நினைக்கச் செய்கின்ற ஏற்பாடுகளும்,
இராப்பொழுதில் அந்த மரத்தின் கீழ் இருக் கும் கடவுளுக்கு விடிவிளக்கு வைப்பதால் அந்தப் பாதையால் பயணிப்போர் மனப்பய மின்றி இரவுப் பயணத்தை இலகுவாக்கவும்,
அந்த மரத்தின் கீழ் அமர்ந்திருந்து ஓய்வு எடுப்பதற்குமான ஏற்பாடுகள் நம் மண்ணில் ஏராளமாக இருந்தன.
ஆனால், இப்போது ஆலடி வைரவருக்கு மூலஸ்தானம், தம்பமண்டபம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் கட்டி இராஜகோபுரத்துக்கு அடிக்கல்லும் நாட்டியாயிற்று.
இதைச் செய்வதற்காக காலாகாலமாக – விருட்சமாக நின்ற நிழல் தந்த அந்த ஆலமரம் அடியோடு தறிபட்டுப் போயிற்று.
ஆலமரத்தை இழந்த சோகத்தாலும் காவல் புரியும் தன்னைக் கதவிட்டு அடைத்து வைக்கும் அறியாமை கொண்ட மாந்தரை வெறுத்தும் வைரவர் ஆளில்லா ஊர் தேடிப் போய்விட்டார்.
இருந்தும், இன்றும் கோயில்கள், தேவாலயங்கள் மதத்துக்கு இடம்பிடிக்கும் அடையாளங்களாக இப்போது போட்டா போட்டியில் கட்டப்படுகின்றன.
முந்தினவன் பாடு வெற்றி என்பது போல பண்ணைக் கடலில் இன்னொரு மாதா கோயிலுக்கு ஏற்பாடு நடக்குது. நாசமாய்ப்போன பிரதேச சபைகள் இவற்றைக் கவனிப்பதாக இல்லை.
பண்ணைக் கடலில் கடல்நீர் ஓடும் மதகு ஒன்றில் வைக்கப்பட்ட வைரவரின் மேல்சட்டையை யாரோ அவசரமாக அகற்றியுள்ளனர்.
அதுவும் தேவையில்லை இதுவும் தேவையில்லை. அனுமதி பெற்று செய்க என்று சொல்வதற்கு இங்கு யார் உளர்?
கோயிலைக் கட்டி வீதியெங்கும் ஒலி பெருக்கி பொருத்திகாது வலிக்க கதறுவதைத் தடுப்பதற்கு ஆளில்லை.
கோபுரத்துக்கு மேல் கோபுரம் கட்டியிருந்த கொட்டகையை முற்றாக உடைத்து கொங்கிறீற் மண்டபம் புதுப்பொலிவுடன்.
ஆனால், இங்கோ ஏழைகள் கவனிப்பார ற்று துன்பத்தில் உழல்கின்றனர்.
பக்கத்தில் இருப்பவர் துன்பம் தன்னைப் பார்க்கப் பெறாதவன் புண்ணியமூர்த்தி என்ற  பாரதி இன்றிருந்தால் கோயில் உள்ள ஊரில் குடியிருக்க வேண்டாம். அங்கு சத்தம், சண்டை, வழக்கு, சாட்சி, பூசை, வியாபாரம் எனப் பலதும் நடக்கும் என்பதால் எட்ட இருப்பதே நல்ல தென்பான்.

Related Articles

Back to top button