கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு பதவி உயர்வு!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, 2004-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 2015-ம் ஆண்டு முதல் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார். அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட், தற்போது இவருக்கு பதவி உயர்வு அளித்துள்ளது.

ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமையின் கீழ் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. சுந்தர் பிச்சை பதவியேற்றதுக்குப் பிறகு, கூகுள் நிறுவனம் பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிலையில், ஆல்பபெட் நிறுவனத்தின் இயக்குநர் குழுமத்தில் ஒருவராக சுந்தர் பிச்சைக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாகவும் அவர் தொடர்ந்து செயல்படுவார். கடந்த 19-ம் தேதியிலிருந்து இந்த நியமனம் செல்லுபடியாகும் என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அவருடன் பணிபுரிவதில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஆல்பபெட் நிறுவனத்தின் இயக்குநர் குழுமத்தில் அவருடன் இணைந்து பணி புரிய ஆர்வமாக இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ லாரி பேஜ் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button