நல்லிணக்கம் என்பது இன்னமும் வடகிழக்கு தமிழர்களை வந்தடையவில்லை‍ – பொறுமையிழந்தார் சம்ப‌ந்தன்

e0cb490243f1b233690f6a706700ffe6யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு கிழக்கு மக்களினால் மெய்யான நல்லிணக்கத்தை அவதானிக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் நேற்றய தினம் ஆற்றிய உரையிபோது போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவர் என புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது எனினும், சொற்ப அளவிலானவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தொடர்ந்தும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கம் இன்னமும் தெளிவாக தென்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர்,வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் பயன்படுத்தி வரும் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை எனவும், அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஏன் காணிகளை வழங்க முடியவில்லை என்பது புரியவில்லை என குறிப்பிட்டதோடு புதிய அரசாங்கம் பல்வேறு விடயங்களை மேற்கொண்டுள்ளதாகவும் கடந்த அரசாங்கத்தை போன்று செயற்படவில்லை எனவும் இருப்பினும் இன்னும் பல விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button