பாகிஸ்தான் கப்டனின் மாமாவும் இந்திய வெற்றிக்காகவே பிரார்த்தனை செய்கிறார்

கேப்டன் சர்ஃபிரஸ் அகமது

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியுள்ள நிலையில், இரு நாட்டு ரசிகர்களும் தங்கள் அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் நிலையில், பாகிஸ்தான் அணி கேப்டனின் தாய் மாமா, இந்தியாவின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்.

உத்தர பிரதேசத்திலுள்ள இட்டா நகரில் வாழும் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபிரஸ் அகமதுவின் தாய் மாமாவான மெக்பூஹாசன், தன்னுடைய பிரார்த்தனை சர்ஃபிரஸூக்காக இருக்கும். ஆனால், தன்னுடைய நாடான இந்தியா வெற்றிபெற விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

பிராடாப்கார் மாவட்டத்தின் குண்டாவை சேர்ந்த மெக்பூ ஹாசன், இட்டாவா விவசாய பொறியில் கல்லூரியில் தலைமை கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார்.

கேப்டன் சர்ஃபிரஸூம் தாய் மாமன் மெக்பூ ஹாசன்

இது பற்றி கருத்து தெரிவித்த அவர் , “இந்த போட்டியில் இந்தியா வெல்வது நிச்சயம். இந்திய அணி விளையாட்டின் எல்லா அம்சங்களிலும் (மட்டை வீச்சு, பந்து வீச்சு மற்றும், பீல்டிங்) சமநிலையில் இருப்பதுதான் இதற்கு காரணம். இந்திய கிரிக்கெட் வீரர்களும் நன்றாக விளையாடுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

ஜூன் 4ஆம் தேதி இந்தியாவுடன் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகவும் மோசமான தோல்வியை தழுவியது.

இந்த தோல்விக்கு பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், குறிப்பாக சர்ஃபிரஸ் அகமது மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பாகிஸ்தான் சமூக வலைதளங்களில் வலம் வந்தன.

கிரிக்கெட் விளையாட்டு திடல்சர்ஃபிரஸ் அகமதுவின் பங்களிப்பை பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்திருந்தனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்த மெக்பூ ஹாசன், தன்னுடைய திறமையால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்ஃபிரஸ் வந்தாலும், பலரும் அதனை விரும்பவில்லை.

முஹாஜீராக (சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றவர்) இருக்கும் ஒருவர், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பதை பல முன்னாள் வீரர்களும் விரும்பவில்லை.

முஹாஜீராக சர்ஃபிரஸ் இருப்பதால்தான், அவருக்கு எதிராக பலரும் குற்றம் சாட்டுகின்றனர் என்று மெக்பூ ஹாசன் கூறுகிறார்.

கராச்சிக்கு சென்றுள்ள மெக்பூ ஹாசனே இதனை அனுபவித்துள்ளதாக விளக்குகிறார்.

திருமணத்தின்போது எடுத்தப்படம்படத்தின் காப்புரிமைMEHBOOB HASAN

“இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்று குடியமர்ந்துள்ளோர் பாகிஸ்தானில் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இது அங்குள்ள அனைவருக்கும் தெரியும்”.

ஆனால், முஹாஜீர் சமூகம் தான் பாகிஸ்தானில் பல முக்கிய பொறுப்புக்களை வகிப்பதுதான் உண்மை. ஜெனரல் பர்வேஸ் முஷரப் போல முஹாஜீர் பலர், பாகிஸ்தான் படையில் ஜெனரல் பொறுப்புகளை ஏற்றுள்ளனர் என்று ஹாசன் கூறினார்.

சர்.பிரஸூம், அவருடைய பெற்றோரும் இந்தியாவுக்கு வருவதுண்டு என்று தெரிவிக்கும் மெக்பூ ஹாசன், தாங்களும் பாகிஸ்தான் போவதுண்டு என்கிறார்.

திருமணத்திற்கு 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றபோது, சர்ஃபிரஸை கடைசியாக பார்த்ததாக மெக்பூ ஹாசன் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button