வடமராட்சி அல்வாய் பகுதியில் கத்திக்குத்து; இளைஞன் பலி

வடமராட்சி அல்வாய் பகுதியில் இடம்பெ ற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் அல்வாய் வடக்கைச் சேர்ந்த குணசிங்கம் நிதர்சன் (வயது – 26) என்பவரே இதில் உயிரிழந்தவராவார்.

வெளியில் நண்பர்களுடன் சென்றதாக கூறப்படும் பிரஸ்தாப இளைஞர் அப்பகுதியில் உள்ள வீதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குற்றுயிராய் கிடந்ததையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விசாரணையினை மேற்கொண்டுவரும் பருத்தித்துறைப் பொலிஸார் அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன் தொடர் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இளைஞனின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button