கொட்டும் மழையிலும் மணவர்களால் ஏ-9 வீதி முற்றுகை

கடந்த வியாழக்கிழமை இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாணவர்களின் கொலைக்கு நீதி கோரி, யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை முற்றுகைப் போராட்டம் நடத்திய மாணவர்கள் தற்சமயம் ஏ-9 வீதியையும் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

14702410_354873268196521_3633902849680145259_n

img_2786

image32

மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று போராட்டங்களை நடத்திவரும் நிலையில், யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக இன்று காலை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கூடினார்கள்.

மாணவர்களின் முற்றுகையால், மாவட்டச் செயலகத்திற்கு பணிக்காக வந்த அரச ஊழியர்கள் பழைய பூங்கா முன்பாக குழுமி நின்றனர். நேரம் செல்லச் செல்ல போராட்டத்தில் பங்குபற்றுவதற்காக மாணவர்கள் பலரும் அங்கு குழுமியதால், வீதியோரமாக போராட்டம் நடத்தியவர்கள் அனைவரும் வீதியில் இறங்கி, ஏ-9 பிரதான வீதியை மறித்து கொட்டும் மழையின் மத்தியிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான கிளிநொச்சியைச் சேர்ந்த கஜனின் பூதவுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுலக்ஷனின் பூதவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button