கிரிக்கெட் போட்டி தினத்தன்று டிக்கட்டுகள் விற்கப்படமாட்டாது

இலங்கையில் நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை போட்டி தினத்தன்று விற்பனை செய்யாமலிருக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

One-team-website-back1

தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெற்று முடிந்த ஆஸி. அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியின் போது நுளைவுச்சீட்டு வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்களால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்பாட்டத்தினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ரசிகர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த ஆர்பாட்டத்தின் போது ரசிகர்கள் கற்களை வீசி மைதானத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாக கிரிக்கெட் சபை இதன் போது சுட்டிக்காட்டியுள்ளது.

உண்மையான கிரிக்கெட் ரசிகர்களிடம் உண்மையான நுழைவுச்சீட்டின் விலையிலும் பார்க்க பல மடங்கு மேலதிகமாக விலை நிர்ணயித்து விற்பனை செய்யப்படுகின்றது. இதுதொடர்பில் எம்மிடம் பல முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே உண்மையான கிரிக்கெட் பிரியர்களின் நலனை பாதுகாக்கவே குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button