அடோப் போட்டோஷாப் பற்றிய ஒரு பார்வை..!

adobe1990 ஆம் ஆண்டு, பிப்ரவரி 19 அன்று, அடோப் போட்டோஷாப் வெளியானது. கம்ப்யூட்டரின் உதவியோடு, யாரும் ஒரு போட்டோவினை எடிட்
செய்திடவும், சிறப்பாக மாற்றி அமைக்கவும், மொத்தமாக வேறு ஒன்றாக அமைக்கவும் மற்றும் பலவகையான மாற்றங்களை மேற்கொள்ளவும் வழி தரும் ஒரு சிறந்த புரோகிராமாக போட்டோ ஷாப் அறிமுகமானது. இன்று நாம் அனைவருமே, போட்டோ ஒன்றில் கை வைத்து, அதன் அளவை மாற்றுவது, ஒளி அமைப்பை மாற்றுவது மற்றும் சின்ன சின்ன மாற்றங்களிலிருந்து, பெரிய அளவிலான மாற்றங்கள் வரை மேற்கொள்ள முடிகிறது என்றால், அதற்கு அடோப் போட்டோ ஷாப் தந்த தைரியம் எனக் கூடச் சொல்லலாம். இன்று இந்த மாற்றங்களை மேற்கொள்வது எளிதாக இருக்கலாம். ஆனால், 1990 ஆம் ஆண்டு, போட்டோ ஒன்றை மாற்றி அமைக்க முடியுமா என்பதே ஒரு பெரிய கேள்விக் குறியாக இருந்தது. அப்போது, பழைய வகையில் பிலிம் போட்டுத்தான் போட்டோக்கள் எடுக்கப்பட்டன. நுகர்வோர்கள் அனைவரும் பயன்படுத்தும் டிஜிட்டல் கேமரா 1994க்குப் பின்னரே வெளிவந்தன. இந்தியாவிற்கு அவை வர இன்னும் சில ஆண்டுகள் ஆயின. பின் நாளில், கிராபிக்ஸ், மெமரி மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களின் ஸ்டோரேஜ் திறன் அதிகரிக்கையில், போட்டோ எடிட்டிங் என்பதை அனைவரும் மேற்கொள்ளலாம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
போட்டோஷாப் தன்னுடைய முதல் மூச்சுக் காற்றினை 1987ல் மேற்கொண்டது. தாமஸ் நால் (Thomas Knoll) இதற்கான விதையைக் கண்டறிந்து மேம்படுத்தினார். அவர் ஓர் ஆய்வு மாணவராகச் செயல்பட்ட போது, அவருக்கு போட்டோ ஷாப்பிற்கான எண்ணம் உதித்தது. அதனைத் தன் சகோதரரின் தூண்டுதலுடன் மேம்படுத்தி வடிவமைத்து, கம்ப்யூட்டர் புரோகிராமாக உருவாக்கினார். முதலில் இந்த புரோகிராம் PhotoShop என்றே (Shop என்பது தனிச் சொல்லாக S பெரிய எழுத்தில் இருப்பதைக் கவனிக்கவும்) அழைக்கப்பட்டது.

பின்னர், ஜான் நால், இந்த புரோகிராமினை ஆப்பிள் மற்றும் அடோப் நிறுவனங்களிடம் காட்டினார். அடோப் இதற்கு உரிமம் வழங்கி, விநியோகிக்க ஒத்துக் கொண்டது. பின்னர், ஜான் தொடர்ந்து உழைத்து, மேக் இன் டோஷ் கம்ப்யூட்டருக்கான புரோகிராமினை 25 ஆண்டுகளுக்கு முன்னால் வழங்கினார்.

அடோப் நிறுவனம், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வகையில், போட்டோஷாப் புரோகிராமினை 1993 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. ‘படங்களை உருவாக்குபவர்களுக்கு வலிமையான ஆயுதம் இது” என்ற புகழைப் பெற்றது. படங்களை எடிட் செய்வதில் போட்டோஷாப் புதிய சந்தையை உருவாக்கியுள்ளது என்று பல பத்திரிக்கைகள் பாராட்டின. தொடர்ந்து வந்த ஆண்டுகளில், போட்டோஷாப் பல புதிய நவீன தொழில் நுட்ப வசதிகளைத் தன் புரோகிராமில் சேர்த்தது. அவை எல்லாம் இப்போது சாதாரணமாக எவரும் பயன்படுத்தும் வகையில் அமைந்த அம்சங்களாக மாறிவிட்டன. பலருக்கு பணி வாய்ப்பு தந்த இந்த புரோகிராம் தந்தவர்களுக்கு இந்நாளில் நாம் நன்றி செலுத்தலாம்

Related Articles

Leave a Reply

Back to top button