காயமடைந்த பல்கலை மாணவனை ஞானசார தேரர் பார்வையிட்டார்

bbs-2யாழ்.பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மாணவர்களின் மோதல் சம்பவத்தில் காயமுற்று சிகிச்சை பெறும் தென்பகுதி மாணவனை, ஞானசார தேரர் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியின் போது பலவந்தமாக கண்டிய நடனத்தை உட்புகுத்த முற்பட்ட சம்பவம் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் மாணவர்களுக்கிடையே மோதல் ஒன்று ஏற்பட்டிருந்தது.இதன்போது காயமுற்ற மாணவர் ஒருவர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனை மேலும் பெரிதுபடுத்தும் வகையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிங்கள மாணவர்கள் ஒன்றியம் கடந்த சில நாட்களாக இனவாதக் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் கடுமையாக வெளியிட்டு வந்திருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் நாட்டின் கடும்போக்கு இனவாத பௌத்த அமைப்பான பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிங்கள மாணவனைப் பார்வையிட்டு ஆறுதல் கூறியிருந்தார்.

இதன் பின்னணி குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக யாழ். பல்கலைக்கழக தாக்குதல் சம்பவத்துக்கு ஏதுவாக செயற்பட்ட சிங்கள மாணவர்களின் பின்னணியில் கடும்போக்குவாத அமைப்பு ஏதும் இயங்குகின்றதா? என்ற சந்தேகமும் சமூக வலைத்தளங்களில் பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button