வன உயிரின பூங்காவில் பெண் ஒருவரை கொன்றது புலி‍, சீன தலை ந‌கர் பீஜிங்கில் நடந்தகொடூரம்

20160724172058பெய்ஜிங்கில் உள்ள வன உயிரின பூங்கா ஒன்றில் இருந்த புலிகள் பெண் சுற்றுலா பயணி ஒருவரை கொன்றும், மற்றொரு பயணியை காயப்படுத்தியும் உள்ளது.

வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, இருவரும் தங்கள் வாகனங்களை விட்டு வெளியேறிய போது இந்த தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

பெய்ஜிங்கில் உள்ள படாலிங் உயிரின பூங்காவில், சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றி பார்க்கும் போது, தங்கள் வாகனங்களில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தைவிட்டு வெளியேறிய பெண்களில் ஒருவர் மீது புலி வேகமாக பாய்ந்து அவரை காயப்படுத்தி இழுத்து சென்றது.

அப்பெண்ணிற்கு துணையாக வந்த மற்றொருவர் அப் பெண்ணைக் காப்பாற்ற முயன்றார். ஆனால், அவர் இரண்டாவது புலியால் தாக்கப்பட்டார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வன உயிரின பூங்காவின் இயக்குநர் யானையால் மிதிப்பட்டு உடல் நசுங்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button