யாழ். நீதிமன்றத்தில் உந்துருளி களவு! திருடன் உந்துருளியை தள்ளிசெல்லும் CCTV காணொளி இணைப்பு.

motorcycle-theft

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குள்ளிருந்து 9 இலட்சம் பெறுமதியான உந்துருளியொன்று திருடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவது,

கடந்த புதன்கிழமை நபரொருவர் நீதிமன்றத்துக்கு உந்துருளியில் சென்று அதனை நீதிமன்ற வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று, திரும்பி வரும்போது அவரது உந்துருளி காணாமல் போயுள்ளது.

இதனையடுத்து குறித்த நபரால் காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டது.

இந்நிலையில், விசாரணையை முன்னெடுத்த காவல்துறையினர், தலைக்கவசம் அணிந்த நபர் ஒருவர் அந்த உந்துருளியை திருடிச்செல்வது நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள வீட்டிலிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து அந்த சிசிரிவி கமராவில் உள்ள பதிவினை அடிப்படையாக வைத்து விசாரணையை முன்னெடுத்துவருகின்றனர்.

யாழ் நீதிமன்ற வாகன பாதுகாப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நபரொருவரது மோட்டார் சைக்கிளை ஒருவர் களவாடி செல்லும் வீடியோ பதிவு

Posted by சங்குநாதம் on Sunday, July 17, 2016

Related Articles

Back to top button