கொத்துக்குண்டுச் சாசனத்தில் இலங்கை கையெழுத்திடவில்லை!

clusterbombs2008ஆம் ஆண்டு மே மாதம் கொண்டுவரப்பட்ட கொத்துக்குண்டு சாசனத்தில் சிறீலங்கா அரசாங்கம் கைச்சாத்திடவில்லை. இந்தச் சட்டமானது 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே அமுலுக்கு வந்தது என காணாமல்போனோர் தொடர்பான விசாரணை நடாத்தும் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரவித்திருப்பதாவது,

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல்­ஹுசேன் வெளியிட்ட இலங்கை தொடர்­பான வாய்­மூல அறிக்­கையில் கொத்­த­ணிக்­குண்டு விவ­காரம் தொடர்பில் பிரஸ்­தா­பித்­தி ருந்தார். இது தொடர்பில் என்­னிடம் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். அந்தக் கேள்­விக்கு சர்­வ­தேச சட்­டத்தின் அடிப்­ப­டையில் பதி­ல­ளிக்க வேண்­டி­யது அவ­சியம் என காணா மல்­போனோர் தொடர்­பான முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு கரு­தி­யது.

அந்த வகையில் இங்கு ஒரு முக்­கிய விடயம் கவ­னிக்­கப்­பட வேண்டும். அதா­வது கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி கொண்­டு­வ­ரப்­பட்ட கொத்­தணி ஆயுத விவ­காரம் குறித்த சாச னத்தில் இலங்கை அர­சாங்கம் கைச்­சாத்­தி­ட­வில்லை. இந்த சட்­ட­மா­னது 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திக­தியே அமு­லுக்கு வந்­தது. அதன்­படி இந்த சட்டம் இலங்­கையின் யுத்தம் முடி­வ­டைந்­த­போது அமுலில் இருக்­க­வில்லை என்­பதால் அந்த நேரத்தில் அவ்­வா­றான ஆயு­தங்­களை பயன்­ப­டுத்­து­வ­தற்கு தடை இருக்­க­வில்லை.

எவ்­வா­றெ­னினும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டத்­திற்கு அமைய இந்த விடயம் மதிப்­பி­டப்­பட வேண்டும். இதன்­போது விதி முறைகள், இரா­ணுவத் தேவைகள் என்­பன சர்­வ­தேச மனி­தா­பி­ன மான சட்­டத்தின் தன்­மை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு ஆரா­யப்­பட வேண்டும்.

இது தொடர்பில் பர­ண­கம ஆணைக்­கு­ழுவின் இரண்­டா­வது ஆணைக்கு அமை­வாக வெ ளியி­டப்ப ட்ட அறிக்­கையில் தெளிவாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த சாச­னத்தில் 70 நாடுகள் கைச்­சாத்­தி­ட வில்லை என்­பது குறிப்­பி­டப்­பட வேண்­டி­ய­தாகும். அதில் அமெ­ரிக்கா, ரஷ்யா, சீனா என்­ப­னவும் உள்­ள­டங்­கு­கின்­றன.

எவ்­வா­றெ­னினும் இந்த விட­யத்தை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்கு காணா­மல்­போனோர் தொடர்­பான முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முயற்­சிக்­க­வில்லை என்­பதை இங்கு அறி­விக்­கின்றோம். ஆனால் அதன் சட்டத் தன்­மையை பற்றி நாங்­கள தெளிவு­ப­டுத்தி னோம்.

இதே­வேளை கொத்­தணிக் குண்­டுகள் பயன்­ப­டுத்தல் தொடர்­பான குற்­றச்­சாட்டை இலங்கை இரா­ணுவம் தொடர்ச்­சி­யாக நிரா­க­ரித்து வந்­துள்­ளது. இலங்கை இரா­ணுவம் இந்த கொத்­தணிக் குண்­டு­களை பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் புதிய ஆதா­ரங்கள் முன்­வைக்­கப்­ப­டு­மானால் அது தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்.

அதா­வது யாரால் பயன்­ப­டுத்­தப்­பட்­டது ? எந்த விதி­மு­றையின் கீழ் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்­பன தொடர்பில் சர்­வ­தேச மனிதாபிமான சட்ட விதிமுறைக்குட்பட்டு விசாரிக்க வேண்டும். காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவை பொறுத்தவரை நாங்கள் எம்மிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்திருக்கிறோம்.

அந்தவகையில் இது தொடர்பில் ஆணைக்குழு மீது சுமத்தப்படும் விமர்சனங்களை நிராகரிக்கிறோம்.

Related Articles

Leave a Reply

Back to top button