நான் யாருக்கும் பயப்பிடப்போவதில்லை-இந்திரஜித் குமாரசுவாமி

நான் யாருக்கும் பயப்பிடப்போவதில்லை என இலங்கை மத்திய வங்கியின் புதிதாக படவியேற்ற 14வது ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
அவரது வங்கி ஊளியர்களுக்கு உரையாற்றூம் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நான் ஜனாதிபதி சிறீசேனவை சந்தித்த போது “நீங்கள் யாருக்கும் பயப்பிட தேவையில்லை உங்கள் கடமையை நேர்மையாக செய்தால் மட்டுமே போதும்” என தெரிவித்தார், ஆகவே எனது நோக்கமும் அவரது வழியை பின் தொடர்ந்து அவரது கொள்கைகளை நிறைவேற்றுவதும் ஆகும்.
நான் பிரதமரை சந்தித்த போதும் நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் அவரிடம் ஒரு சீரிய பார்வை இருந்தது. அதனை நிறைவேற்றுவதிலும் மத்திய வங்கியின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
நாம் நமது கடமையை சரியாக செய்யாத வரைக்கும் எதுவும் முன்னேறப்போவதில்லை, ஆகவே நாட்டின் நிலையான பொருளாதார வளற்சிக்கான முக்கிய பொறுப்பு நம்முன்னே இருக்கிறது, நாமனைவரும் அதற்காக பாடுபடவேண்டும்.
ஒருமைப்பாடு, உயர் தொழினுட்பம், சிறந்த தொழில்முறை எனும் மூன்று கோட்பாடுகளை முன்னிறுத்தி நாங்கள் செயற்பட இருக்கிறோம்.
யாராவது நன் எனது கடமையிலிருந்து விலகுவதாக நினைத்தால் தயவு செய்து உடனடியாக எனக்கு அது பற்றி தெரியாப்படுத்துங்கள். இதனை செவிமடுக்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். அத்தொடு, கலந்துரையாடல்கள், புதிய கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் நடப்பதை நான் ஊக்குவிக்கிறேன் என மேலும் தெரிவித்தார்.