வடசென்னை படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்.

1448024632-7693னுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

வடசென்னை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார். டேனியல் பாலாஜி, சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக பிரம்மாண்ட ஜெயில் போன்ற அரங்கு அமைத்துள்ளனர். அதில், விரைவில் படப்பிடிப்பை நடத்தவிருக்கின்றனர்.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை தொடர்ந்து வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button