வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் உணவருந்திக்கொண்டிருந்த சிறுவன் பலி


கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியில் இன்றுகாலை தற்காலிக வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் உணவருந்திக்கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் பலியாகியுள்ளான்.
கடந்த அரசின் காலத்தில் வீட்டுத்திட்டம் கிடைத்தும் அதனை பூர்த்தி செய்வதற்கு அவர்களுக்கான முழுமையான பணம் வழங்கப்படவில்லை.
இதனால் அந்த குடும்பத்தால் நிரந்தர வீட்டுக்கு செல்ல முடியாது போய்விட்டது. என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
