திருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா!

திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியாகியிருப்பதாக தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், 743 பேரில் 402 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் 338 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், ஏனைய 3 பேரும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை மாதத்தில் மட்டும் ஏழுமலையான் கோயிலில் 2 இலட்சத்து 38ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் 16 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பில் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருப்பதாகவும் கூறிய சிங்கால், பக்தர்களுக்கு 11 இலட்சத்து 35 ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button