நாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க களனி ரஜமஹா விகாரையில் இன்று ( ஓகஸ்ட் 9) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றார். இதன்மூலம் 2 தடவைகள் ஜனாதிபதியாகவும் 4 தடவைகள் பிரதமராகவும் அவர் பதவி வகித்து இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்‌ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. அதனடிப்படையில் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றுள்ளார். புதிய அமைச்சரவையை பிரதமர் பரிந்துரைக்க ஜனாதிபதி விரைவில் நியமிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

Related Articles

Back to top button