நாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு!

2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் வாக்களிப்பட்ட 12,343,302 வாக்குகளில், 744,373 வாக்குகள் அல்லது 6.03 சதவீத வாக்குகள் நிராகரி்க்கப்பட்டுள்ளன. ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் 700,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளா கஜநாயக்க தெரிவித்தார்.

வரலாற்றில் முதல்முறையாக ஒரு தேர்தலில் இவ்வளவு அதிக தொகையான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிராகரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் அதிக எண்ணிக்கையில் தேர்தல் முறை குறித்து வாக்காளர்களுக்கு அறிவு இல்லாததால் இருக்கலாம் அல்லது தேர்தலில் முன்வைக்கப்பட்ட வேட்பாளர்கள் மீது வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று கஜநாயக்க தெரிவித்தார்.

அதிக எண்ணிக்கையிலான தபால்மூல வாக்குகளும் நிராகரிக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்கால தேர்தலை நடத்துவதற்கு முன்னர் இந்த விடயத்தை பரிசீலித்து அதனைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

Related Articles

Back to top button