ரி20 உலகக் கிண்ணத் தொடர்பு ஒத்திவைப்பு

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் சபை ஐசிசி) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கோரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, ஆஸ்திரேலியாவில் ஒக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை திட்டமிடப்பட்டுள்ள ரி20 உலகக் கிண்ணத் தொடர் ஒத்திவைக்கப்படும் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இன்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்குப் பின்னர், ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகள் நடைபெறவுள்ள ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்கள் பற்றிய திகதிகளையும் ஐசிசி அறிவித்துள்ளது.

இதன்படி, 2021ஆம் ஆண்டு ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் நவம்பர் 14, 2021-இல் நடைபெறுகிறது.

2022-ம் ஆண்டு ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் நவம்பர் 13, 2021-இல் நடைபெறுகிறது.

2023-ம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் நவம்பர் 26, 2023-இல் நடைபெறுகிறது.

ஐசிசியின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்புக்காகத்தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை காத்திருந்தது. எனவே, ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Related Articles

Back to top button