காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை- 3 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர்- குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

குல்காம் மாவட்டம்- நாகநாத் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தகவலுக்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) காலை பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் ,முகமது அமைப்பைச்சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button