திருச்சியில் 14 வயதுச் சிறுமி எரியூட்டப்பட்டு கொலை!

திருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டை அருகில் 14 வயது சிறுமி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சோமரசம் பேட்டைக்கு அருகிலுள்ள அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த கங்காதேவி என்ற சிறுமியே நேற்று (திங்கட்கிழமை) இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சக தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுமி இயற்கை உபாதைக்காக காட்டுப் பகுதிக்குச் சென்றதாகவும், பின்னர் காட்டின் சிறுதுதூரத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சிறுமி கண்டுப்பிடிக்கப்பட்ட பகுதி மது அருந்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக உள்ளூர் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button