எம்.கே. சிவாஜிலிங்கம் கைது

தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கொன்றின் பிடியாணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ். வெல்வெட்டித்துறையிலுள்ள வீட்டில் இருந்தபோது கைது செய்யப்பட்ட அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button