காஷ்மீரில் மோதல் – 2 பயங்கரவாதிகள் சுட்டுகொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர். அதேநேரம் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பண்ட்ஸூ என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சி.ஆர்.பி.எப் 182ஆவது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள், பொலிஸாருடன் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதன்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார்.

தொடர்ந்து நடந்த மோதலில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இது குறித்து இராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், துப்பாக்கிச்சண்டை நடந்த இடத்தில் 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என தேடுதல் வேட்டை தொடர்கிறது என தெரிவித்தார்.

ஜூன் மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுகொன்றுள்ளனர். இந்தாண்டு நடைபெற்ற பல்வேறு மோதல்களில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close