படைகளை விலக்கிக்கொள்ள இரு நாட்டு இராணுவத்தினரும் தீர்மானம்

இந்திய – சீன இராணுவத்தினரிடையே நடந்து வரும் மோதல் போக்கை தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாட்டு இராணுவத்தினரும் தங்களது படைகளை விலக்கி கொண்டு முகாமிற்கு திரும்ப முடிவு செய்துள்ளன.

இது குறித்து இந்திய இராணுவம் கூறுகையில், “இராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தையில் இரு தரப்பு படைகளும் விலகிச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையானது கட்டுக்கோப்பான மற்றும் நேர்மறையான ரீதியில் இடம்பெற்றது. கிழக்கு லடாக் பகுதியில் மோதல் போக்கு நிலவி வரும் அனைத்து இடங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இரு தரப்புகளும் பிரச்சினைக்குரிய இடங்களிலிருந்து விலகிச் செல்வது என ஒப்புக் கொண்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகள் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வந்த நிலையில், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள இரு தரப்புகளும் தீர்மானித்தன.

இந்நிலையில் இந்திய மற்றும் சீன இராணுவத் தரப்புகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சீன கட்டுப்பாட்டில் இருக்கும் மோல்டோவில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. .

சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாட்டு இராணுவத்தை சேர்ந்தவர்களும் தங்களுடைய முகாமிற்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close