அமெரிக்கப்படை தாக்குதல் ஐ.எஸ் தலைவர் பலி?

downloadபாக்தாத்: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர், அபு பக்கர் – அல் பாக்தாதி, அமெரிக்க கூட்டுப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடுகளான ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. அந்த அமைப்புக்கு எதிராக, அமெரிக்க கூட்டுப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிரியாவில் உள்ள, ரக்கா நகரில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய விமானப்படை தாக்குதலில், ஐ.எஸ்., தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதாக, அரேபிய பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
இதனை மேற்கோள்காட்டி, துருக்கி பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அமெரிக்க கூட்டுப்படை சார்பில் எந்த செய்தியும் வெளியாகவில்லை.
விமானப்படை தாக்குதலில், மூன்று நாட்களுக்கு முன், அமெரிக்க கூட்டுப்படைகளின் விமான தாக்குதலில் பாக்தாதி காயமடைந்ததாக, ஈராக் ‘டிவி’ சேனல்களில் செய்தி
வெளியானது. அப்போதும், இந்த செய்தியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுதிப்படுத்தவில்லை.சர்வதேச பயங்கரவாதி: ஈராக்கில் பிறந்த, அல் பாக்தாதி, 44, அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்தபோது, புரட்சி படையை வழி நடத்தியவர்.  முஜாகிதீன் சுரா கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தி, பேராட்டம் நடத்தினார்; பின், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைந்து அதன் தலைவர் அபு ஒமரின் மரணத்திற்கு பின், தலைமை பொறுப்பை ஏற்றார். சர்வதேச பயங்கரவாதியாக, 2011ம் ஆண்டு, அறிவிக்கப்பட்டார். பாக்தாதி தலைக்கு, அ
மெரிக்கா, 68 கோடி ரூபாய் வெகுமதி அறிவித்திருந்தது.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Close