ஒபாமா பதவி விலக வேண்டும் ; டொனால்ட் டிரம்ப்

மெ­ரிக்க ஜனா­திObama-vs-Trump-Americans-will-not-vote-for-Donald-Trump-1­பதி பராக் ஒபாமா ஒர்­லான்­டோவில் தன்­னி­னச்­சேர்க்­கை­யா­ளர்­க­ளுக்­கான இரவு விடு­தியில் இடம்­பெற்ற தீவி­ர­வாத தாக்­கு­தலை அடிப்­ப­டை­வாத இஸ்­லாத்­துடன் தொடர்­பு­ப­டுத்த தவ­றி­ய­மைக்­காக அவர் பதவி விலக வேண்டும் என குடி­ய­ரசுக் கட்­சியின் உத்­தேச ஜனா­தி­பதி வேட்­பாளர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்­துள்ளார்.

அத்­துடன் ஜன­நா­யகக் கட்­சியின் வேட்­பாளர் ஹிலாரி கிளின்டன் ஜனா­தி­பதி பதவி நிலைக்­கான போட்­டி­யி­லி­ருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என அவர் தெரி­வித்தார்.

 

“எமது நாட்டை அடிப்­ப­டை­வாத இஸ்­லா­மிய தீவி­ர­வாதி தாக்­கி­யுள்ளார். இது 9/11 தாக்­கு­த­லுக்குப் பின்னர் நாடு எதிர்­கொண்ட மிக மோச­மான தாக்­கு­த­லாகும். அத்­துடன் இத்­த­கைய தாக்­கு­த­லொன்று இங்கு இடம்­பெ­று­வது கடந்த 6 மாத காலப் பகு­தியில் இரண்­டா­வது தட­வை­யாகும். ஆனால் அமெ­ரிக்க ஜனா­தி­பதி இந்தத் தாக்­குதல் குறித்து குறிப்­பி­டு­கையில் அடிப்­ப­டை­வாத இஸ்லாம் தொடர்பில் ஒரு வார்த்­தையை தானும் கூற மறுத்­துள்ளார். அதன் கார­ண­மாக அவர் பதவி விலக வேண்டும்” என டொனால்ட் டிரம்ப் தெரி­வித்தார்.

அத்­துடன் ஹிலாரி கிளின்­டனும் ‘அடிப்­ப­டை­வாத இஸ்லாம்’ என்ற இரு சொற்­களைக் கூற மறுத்துள்ளதால் அவரும் ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Leave a Reply

Close