வனிதா விஜயகுமாருக்கு 27ஆம் திகதி திருமணம்

பிக்பொஸ் புகழ் நடிகை வனிதா விஜயகுமார் எதிர்வரும் 27 ஆம் திகதி பீட்டர் போல் என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.

இது குறித்து வனிதா விஜய குமார் கூறுகையில், “எனக்கு 40 வயது ஆகப் போகிறது. ஊரடங்குக் காலம் வாழ்க்கையில் பல விடயங்களை நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.

ஒரு நண்பராக பீட்டர் பால் எனக்கு அறிமுகமானார். ஊரடங்குச் சமயத்தில் எனது யூடியூப் சேனலின் தொழில்நுட்ப உதவிக்கு அவர் மிகவும் ஆதரவாக இருந்தார். அக்கறையுடன் என்னைக் கவனித்துக்கொள்கிறார்.

அவர் அருகில் இருக்கும்போது நான் பாதுகாப்பாக உணர்கிறேன். எனக்குக் குழந்தைகள் தான் முக்கியம் என அனைவருக்கும் தெரியும். திருமணம் செய்துகொள்கிறீர்களா எனக் கேட்டபோது நான் பேச வழியில்லாமல் ஆனேன். (ஆனால் உள்ளுக்குள் ஆமாம் எனக் குரல் எழுப்பினேன்.) இதற்குக் குழந்தைகள் சம்மதிக்க வேண்டும் என்றேன்.

அவர்களிடம் அவர் கேட்டபோது அவர்களும் உரத்தக் குரலில் சரி என்றார்கள். சிங்கிள் மதராக பல கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். குடும்பம் என்று சொல்லக்கூடியவர்கள் எனக்கு உதவவில்லை.

பீட்டர் பால் யார் என்று கேட்கிறவர்களுக்கு!

அவர் தொழில்முறையில் ஓர் இயக்குநர். அன்பானவர். நேர்மையானவர். என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். அவருடைய படங்கள் பற்றி விரைவில் அறிந்துகொள்வீர்கள். திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும் குடும்பத்தினரும் மட்டுமே கலந்துகொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.

Show More

Related Articles

Close