மூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தொடர்பில் அடுத்த 24 மணித்தியாலத்துக்குள் காத்திரமான தீர்மானம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.

மே மாதம் 22 ஆம் திகதி பிக்குகள் முன்னணியின் கையொப்பத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு மகஜரைக் கையளித்தோம்.

அதில், அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறும், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை நீக்குமாறும் கோரியிருந்தோம். இந்த மகஜரைக் கொடுத்து நீண்ட காலம் கழிந்துள்ளது. நாம் எதிர்பார்த்த காலம் நிறைவடைந்துள்ளது. தற்பொழுது 24 மணி நேரம் ஜனாதிபதிக்கு அவகாசம் வழங்குகின்றோம்.

இக்காலப் பகுதிக்குள் அவர்களை பதவி நீக்கம் செய்யாவிடின் நாம் அதிரடியான தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளோம் எனவும் தேரர் மேலும் கூறினார்.   (மு)

Show More

Related Articles

Close