Trending

உலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்

கிரிக்கெட் திருவிழா, அதாவது 12 ஆவது கிரிக்கெட் உலகக் கிண்ணம் May 30 முதல் July 14 வரை இங்கிலாந்து மண்ணிலே நடைபெற காத்திருக்கிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற 11 உலகக் கிண்ணங்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா ஐந்து தடவைகளும், இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் தலா இரண்டு தடவைகளும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஒவ்வொரு தடவையும் உலகக் கோப்பையை தம்வசப்படுத்தி இருக்கின்றன. இம்முறை ஏற்கனவே கிண்ணம் வென்ற நாடுகளில் ஒன்றா அல்லது புதிய சாம்பியன்கள் உருவாக போகிறார்களா என்ற முக்கியமான கேள்விக்கு விடை தர தயாராகி கொண்டு இருக்கிறது கிரிக்கெட்டின் தாயகம் இங்கிலாந்து

Image result for icc cricket world cup 2019

2007 இல் T-20 போட்டிகளின் அறிமுகத்தின் பின்னர் இந்த ஒருநாள் போட்டிகளின் மீதான நாட்டம் குறைந்து போனாலும் உலகக் கிரிக்கெட் அரங்கில் கோலோச்சும் அனைத்து அணிகளுக்கிடையிலான இந்த வரலாற்று தொடர் எப்பொழுதும் நம்மை ஈர்க்கவோ, திருப்திப்படுத்தவோ தவறியதில்லை. இது ஒரு புறம் இருக்க, கடந்த தொடர்கள் போன்று அல்லாமல் 1992 இல் நடைபெற்ற உலகக் கிண்ணத்துக்கு ஒப்பாக “round robin” முறையில், பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை பத்தாக குறைக்கப்பட்டு அனைத்து அணிகளுக்கிடையிலான லீக் போட்டிகளின் முடிவில் முதல் நான்கு அணிகளும் அரையிறுதி ஆட்டங்களில் பங்கேற்க கூடியதாக இந்த தொடர் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பது ஒவ்வொரு அணியும் ஏனைய ஒன்பது அணிகளுடனும் லீக் போட்டியில் ஆடும் என்பதை கடந்து, பிற காரணிகளின் செல்வாக்கு இல்லாத இடத்தில் திறமையான நான்கு அணிகள் அரையிறுதியில் மோதும் என்பதே உண்மை.

அண்மையில் நடைபெற்று நிறைவுக்கு வந்திருக்கும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தொடரின் அனைத்து போட்டிகளிலும் 300க்கு அதிகமான ஓட்டங்கள் குவிக்கப்பட்டு இருப்பதோடு உலகக் கிண்ணத்தை காண வரும் இரசிகர்களுக்கு வழங்கப்படும் ஸ்கோர் அட்டைகளில் 500 வரை இலக்கங்கள் பொறிக்கப்பட்டு இருப்பது, இந்த உலகக் கோப்பையின் ஆடுகளங்கள் பெருமளவில் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இது ஒரு புறம் இருக்க பங்குபற்றும் பத்து அணிகளும் தமது 15 பெயர் கொண்ட இறுதி அணியினை அறிவித்துள்ளதோடு அனைத்து அணிகளும் இங்கிலாந்து மண்ணில் தமது பயிற்சிகளையும் ஆரம்பித்துள்ளன. இந்த பத்து அணிகளில் அந்த மகுடத்தை சூட போகின்ற அணி எது என்று பார்க்கலாம்.

இங்கிலாந்து

England world cup squad

தொடரை நடாத்தும் நாடு. 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முதல் சுற்றோடு வெளியேறிய இங்கிலாந்து இந்த நான்கு வருட காலத்தில் முக்கியமான பல மாற்றங்களை அணியில் ஏற்படுத்தியதோடு ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் முதலாவது அணியாக தம்மை நிலைநிறுத்தியதோடு இந்த உலகக் கோப்பையின் முதன்மை அணியாகவும் களம் காண காத்திருக்கிறது. இந்த நான்கு வருட தயார்படுத்தலின் பெரிய விளைவு நீண்ட பலமான,அதிரடியான துடுப்பாட்ட வரிசை என்று சொன்னால் மறுப்பதற்கில்லை. ஜேசன் ரோய், பெய்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன், பட்லர்,ஸ்டோக்ஸ், மொய்ன் அலி என மிக மிக பலமான நீண்ட துடுப்பாட்ட வரிசை. இவர்கள் அனைவரும் தனியே சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் என்பதை தாண்டி அனைவரும் match winners என்றே சொல்லலாம். அதாவது வெறுமனே ஓட்டக்குவிப்பை தாண்டி இவர்களில் யாராவது ஒருவர் களத்தில் சற்று அதிக நேரம் செலவழித்து விட்டால் போட்டியின் போக்கை இலகுவாக தம்பக்கம் மாற்றக்கூடிய மட்டையாளர்கள். சொந்த மைதானங்கள் வேறு, இவர்களை கட்டுப்படுத்துவது என்பது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு பெரிய தலையிடியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. துடுப்பாட்டத்தில் இருக்கும் பலம் பந்துவீச்சை பொறுத்தவரை சற்று குறைவு தான். கடந்த காலங்களில் இங்கிலாந்து பல வெற்றிகளை குவித்திருந்தாலும் பந்துவீச்சின் மூலம் பெற்று கொண்ட வெற்றிகள் மிக குறைவே. அதுவும் ஓட்டங்களை விட்டுக் கொடுப்பதோடு middle over களில் விக்கெட்களை வீழ்த்தவும் தவறிவிடுகின்றனர். இதனால் எதிரணி இறுதி ஓவர்களில் அதிகளவான ஓட்டங்களை பெறுவது எளிதாகி விடுகிறது. முக்கியமாக இந்த death overs களில் இங்கிலாந்து பந்துவீச்சு படு மோசம் தான். ஆனாலும் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ரொம் குர்ரான், ஜொப்ரா ஆர்ச்சர் இருவரும் இறுதி கட்டங்களிலும் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்கள். ஆனால் இருவரும் சற்று அனுபவம் குறைந்த தங்களது முதல் உலகக் கோப்பையில் ஆடும் வீரர்கள். அந்த அழுத்தம் இல்லாமல் ஆடும் இடத்தில் சாதிப்பார்கள் என நம்பலாம். அத்தோடு பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், மொயன் அலி, வோக்ஸ் என அதிகளவில் சகலதுறை வீரர்களுடன் ஆட இருப்பது மிகப் பெரிய பலமே. அத்தோடு இறுதியாக இடம்பெற்ற இரண்டு உலகக் கிண்ணங்களையும் போட்டியை நடாத்திய நாடுகளே கைப்பற்றியுள்ள நிலையில், சொந்த மைதானங்கள், இரசிகர்கள், பலமான அணி என ஏகப்பட்ட சாதகங்களோடு களமிறங்குகிறது இங்கிலாந்து. பார்க்கலாம் தமது கன்னி உலகக் கோப்பையை பெற்றுக்கொள்ளுமா என்று.

இந்தியா

Image result for 2019 icc world cup indian squad

மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் எப்பொழுதும் ஒரு பலமான அணி. எந்த காலகட்டத்திலும் அட்டகாசமான துடுப்பெடுத்தாட்டக்காரர்களை கிரிக்கெட் அரங்கிற்கு தருவித்து கொள்ளும் நாடு. கடந்த உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் தோற்று வெளியேறிய அணி இம்முறை அதை விட சற்று பலமான அணியாகவே களம் காண்கிறது. தவான், ரோகித் சர்மா, ஹோலி, தோனி, கேதார் ஜாதவ், பாண்டியா என்று அசத்தலான துடுப்பாட்ட வரிசை. ஆனால் இம்முறை ஒரு நாள் போட்டிகளில் துடுப்பெடுத்தாட்டத்தில் முக்கியமான இடமாக கருதப்படும் நான்காம் இலக்கத்தில் ஒரு புதிய முயற்சியை அதுவும் உலகக் கிண்ணம் போன்ற ஒரு பெரிய தொடரில் எடுத்து இருக்கிறது இந்திய அணி. வெறுமனே ஒன்பது ஒருநாள் ஆட்டங்களில் ஆடி இருக்கின்ற விஜய் சங்கர் இந்த நான்காம் இலக்கத்தில் ஆட போகிறார் என அணித்தேர்வுக் குழு தலைவர் தெரிவித்திருப்பது சற்று ஆச்சர்யமானதே. இந்த நான்காம் இலக்கத்தில் இந்திய அணி பல வீரர்களை பரீட்சித்து இறுதியாக அம்பதி ராயுடு பொருத்தமானவர் என கடந்த வருட இறுதியில் அறிவித்தது. ஆனால் மீண்டும் உலகக் கோப்பைக்கான அணியில் புதியவராக சகலதுறை ஆட்டக்காரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். பார்க்கலாம் விஜய் சங்கர் தனக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை சிறப்பாக பயன்படுத்தி இந்திய அணிக்கு ஒரு துருப்பு சீட்டாக மாறுவாரா என்று. ஏனைய இடங்களில் ஆடும் அனைவரும் அனுபவ ஆட்டக்காரர்கள். பெரிய தொடர்களில் அசத்தும் தவான், ஆபத்தான ரோகித் சர்மா, “ரன் மெஷின்” ஹோலி, கேதார் ஜாதவ், அனுபவமான தோனி, அதிரடியான பாண்டியா என இந்திய அணி துடுப்பாட்டத்தை பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கிறது. வழக்கமான இந்திய அணி துடுப்பாட்டம் பலமாகவும் பந்துவீச்சு குறைபாடுகளுடனும் தான் இதுவரை பெரிய தொடர்களில் பங்கேற்றிருக்கிறது. ஆனால் இம்முறை பந்துவீச்சிலும் வழக்கத்துக்கு மாறான ஒரு இந்திய அணி களம் நுழையும் என்றே சொல்லலாம். புவனேஸ்வர் குமார், பும்ப்ரா, சமி, குல்தீப் ஜாதவ், சாகல், ஜடேஜா என அனைவரும் சிறப்பாக தம்மை நிரூபித்த பந்துவீச்சாளர்கள். பும்ப்ரா அண்மைய காலமாக மிக மிக அற்புதமாக பந்துவீசி வருகிறார். பும்ப்ரா, புவனேஸ்வர் குமார் இருவரும் பவர் ப்ளே ஓவர்களிலும் சரி, இறுதி ஓவர்களிலும் சரி சிறப்பாக பந்துவீச கூடிய அற்புதமான பந்துவீச்சாளர்கள். Middle overs களில் இலக்குகளை சாய்ப்பதோடு மட்டும் அல்லாமல் ஓட்டங்களையும் கட்டுப்படுத்தி பந்துவீச கூடிய சிறந்த சுழல் பந்து வீச்சாளர்கள் குல்தீப் ஜாதவ் மற்றும் சாகல் என பலமான பந்துவீச்சு அணியாகவும் களம் காண இருக்கிறது இந்தியா. பொறுத்திருந்து பார்ப்போம் அணித்தலைவராக தனது கன்னி உலகக் கோப்பையை இந்திய அணிக்கு பெற்று கொடுப்பாரா ஹோலி என்று மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் எப்பொழுதும் ஒரு பலமான அணி. எந்த காலகட்டத்திலும் அட்டகாசமான துடுப்பெடுத்தாட்டக்காரர்களை கிரிக்கெட் அரங்கிற்கு தருவித்து கொள்ளும் நாடு. கடந்த உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் தோற்று வெளியேறிய அணி இம்முறை அதை விட சற்று பலமான அணியாகவே களம் காண்கிறது. தவான், ரோகித் சர்மா, ஹோலி, தோனி, கேதார் ஜாதவ், பாண்டியா என்று அசத்தலான துடுப்பாட்ட வரிசை. ஆனால் இம்முறை ஒரு நாள் போட்டிகளில் துடுப்பெடுத்தாட்டத்தில் முக்கியமான இடமாக கருதப்படும் நான்காம் இலக்கத்தில் ஒரு புதிய முயற்சியை அதுவும் உலகக் கிண்ணம் போன்ற ஒரு பெரிய தொடரில் எடுத்து இருக்கிறது இந்திய அணி. வெறுமனே ஒன்பது ஒருநாள் ஆட்டங்களில் ஆடி இருக்கின்ற விஜய் சங்கர் இந்த நான்காம் இலக்கத்தில் ஆட போகிறார் என அணித்தேர்வுக் குழு தலைவர் தெரிவித்திருப்பது சற்று ஆச்சர்யமானதே. இந்த நான்காம் இலக்கத்தில் இந்திய அணி பல வீரர்களை பரீட்சித்து இறுதியாக அம்பதி ராயுடு பொருத்தமானவர் என கடந்த வருட இறுதியில் அறிவித்தது. ஆனால் மீண்டும் உலகக் கோப்பைக்கான அணியில் புதியவராக சகலதுறை ஆட்டக்காரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். பார்க்கலாம் விஜய் சங்கர் தனக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை சிறப்பாக பயன்படுத்தி இந்திய அணிக்கு ஒரு துருப்பு சீட்டாக மாறுவாரா என்று. ஏனைய இடங்களில் ஆடும் அனைவரும் அனுபவ ஆட்டக்காரர்கள். பெரிய தொடர்களில் அசத்தும் தவான், ஆபத்தான ரோகித் சர்மா, “ரன் மெஷின்” ஹோலி, கேதார் ஜாதவ், அனுபவமான தோனி, அதிரடியான பாண்டியா என இந்திய அணி துடுப்பாட்டத்தை பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கிறது. வழக்கமான இந்திய அணி துடுப்பாட்டம் பலமாகவும் பந்துவீச்சு குறைபாடுகளுடனும் தான் இதுவரை பெரிய தொடர்களில் பங்கேற்றிருக்கிறது. ஆனால் இம்முறை பந்துவீச்சிலும் வழக்கத்துக்கு மாறான ஒரு இந்திய அணி களம் நுழையும் என்றே சொல்லலாம். புவனேஸ்வர் குமார், பும்ப்ரா, சமி, குல்தீப் ஜாதவ், சாகல், ஜடேஜா என அனைவரும் சிறப்பாக தம்மை நிரூபித்த பந்துவீச்சாளர்கள். பும்ப்ரா அண்மைய காலமாக மிக மிக அற்புதமாக பந்துவீசி வருகிறார். பும்ப்ரா, புவனேஸ்வர் குமார் இருவரும் பவர் ப்ளே ஓவர்களிலும் சரி, இறுதி ஓவர்களிலும் சரி சிறப்பாக பந்துவீச கூடிய அற்புதமான பந்துவீச்சாளர்கள். Middle overs களில் இலக்குகளை சாய்ப்பதோடு மட்டும் அல்லாமல் ஓட்டங்களையும் கட்டுப்படுத்தி பந்துவீச கூடிய சிறந்த சுழல் பந்து வீச்சாளர்கள் குல்தீப் ஜாதவ் மற்றும் சாகல் என பலமான பந்துவீச்சு அணியாகவும் களம் காண இருக்கிறது இந்தியா. பொறுத்திருந்து பார்ப்போம் அணித்தலைவராக தனது கன்னி உலகக் கோப்பையை இந்திய அணிக்கு பெற்று கொடுப்பாரா ஹோலி என்று.

ஆஸ்திரேலியா

Related image

நடப்பு சம்பியன்கள். ஐந்து தடவைகள் உலகக் கோப்பையை தமதாக்கிய ஒரே நாடு. உலகக் கிரிக்கெட் அரங்கில் எப்பொழுதுமே தாம் ஆபத்தானவர்கள் தான் என்பதை இந்த மஞ்சள் சட்டை காரர்கள் காட்டுவதற்கு தவறியதே இல்லை. ஆனால் கடந்த வருடம் கிரிக்கெட் அரங்கில் இடம்பெற்ற ஒரு கசப்பான சம்பத்தினால் அணித்தலைவர் ஸ்மித், ஆரம்ப அதிரடி ஆட்டக்காரர் வோர்னர் இருவரும் ஓராண்டு தடை விதிக்கப்பட சற்று ஆஸ்திரேலியா ஆட்டம் கண்டது என்றால் மறுப்பதற்கில்லை. ஆனாலும் உலகக் கோப்பை ஆரம்பிக்க முன்னர் இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலும், டுபாய் இல் அசைக்க முடியாத அணியாக இருந்த பாகிஸ்தானையும் ஒருநாள் தொடர்களில் வென்ற நம்பிக்கையோடு உலகக் கோப்பையை மீண்டும் வெல்ல ஒரு அதீத புத்துணர்ச்சியோடு களம் நுழைகிறார்கள் இந்த கங்காருக்கள். அத்தோடு ஓராண்டு தடை முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள ஸ்மித், வோர்னர் இருவரும் அணிக்கு அதீத நம்பிக்கையை குடுப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கடந்த ஒரு வருட காலமாக பிஞ்ச்- கவாஜா ஜோடி ஆரம்ப ஜோடியாக களம் இறங்கியது. இதனால் வோர்னரை மூன்றாம் இலக்கத்திலும், ஸ்மித் நான்காம் இலக்கத்திலும் ஆட ஆஸ்திரேலியா முடிவெடுக்குமாயின் அது அவர்களுக்கு ஒரு பாரதூரமான முடிவாகவே அமையும். வோர்னர் ஆரம்பம் முதலே அதிரடி காட்டக்கூடியவர். பவர் ப்ளே ஓவர்களில் வோர்னர் ஆடுவாராக இருப்பின் மிக வேகமாக ஓட்டங்களை குவித்து ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான ஆரம்பத்தை வழங்குவார் என்பது திண்ணம். அதே போல் ஸ்மித் களத்தில் அதிக நேரம் செலவழித்து ஆடக்கூடியவாறு மூன்றாம் இலக்கத்தில் ஆட வேண்டும். ஓராண்டு தடைக்கு பின்னர் இந்த இருவரும் ஓட்டங்களை குவிப்பதற்கு மிகுந்த பசியுடன் இருக்கும் வீரர்கள். கண்டிப்பாக இது ஆஸ்திரேலியர்களுக்கு இன்னும் பலம். அத்தோடு துடுப்பாட்டத்தில் ஷோர்ன் மார்ஸ், ஸ்டொய்னிஸ் இறுதி நேர அதிரடிக்கு மக்ஸ்வெல் என பலமான அணியாக இருக்கிறது ஆஸ்திரேலியா. எப்பொழுதும் துடுப்பாட்டம், பந்துவீச்சு என சமபலமாக களம் இறங்கும் ஆஸ்திரேலியா இம்முறையும் ஏமாற்றவில்லை. பந்துவீச்சில் வேகப்புயல்கள் ஸ்டார்க், பட் கம்மின்ஸ், ஹோல்டர் நைல், பெஹெண்ட்ஃரொப்,ரிச்சர்ட்சன், சுழலில் சாம்பா, லயன் என பலமான அணியாகவே இருக்கிறது. கடந்த உலகக் கோப்பையின் தொடர் நாயகன் ஸ்டார்க் இம்முறையும் அதே மாஜாஜாலங்களை இங்கிலாந்து மண்ணில் நிகழ்த்தினால் ஆஸ்திரேலியர்கள் ஆறாவது கிண்ணத்தையும் கைப்பற்றுவார்கள் என்பது உறுதி.

பாகிஸ்தான்

Image result for 2019 world cup pakistan team players

2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மினி உலகக் கிண்ண சம்பியன்கள். பாகிஸ்தானும் இந்த உலகக் கோப்பைக்கான கழுகுகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. வெற்றியோ தோல்வியோ, ஒரு போட்டியில் எதிர்பாராத முடிவுகளை தருவதில் கில்லாடிகள் இந்த பாகிஸ்தானியர்கள். துடுப்பாட்டமும் சரி, பந்துவீச்சும் சரி பலமான அணியாகவே இருக்கிறது பாகிஸ்தான். ஆரம்ப ஜோடி இமாம் உல் கக்,பக்கர் சல்மான் இருவருமே கடந்த ஆண்டுகளில் சிறப்பான ஆரம்பத்தை அணிக்கு வழங்கி கொண்டிருக்கும் ஒரு ஜோடி. உல் கக் நிதானமாகவும் சல்மான் வழக்கமான அதிரடியுடனும் ஆடும் இடத்தில் பாகிஸ்தான் மிகச்சரியான ஆரம்பம் ஒன்றை பெறும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு மூன்றாம் இலக்கத்தில் ஆடும் பாபர் அசாம் அண்மைக்காலமாக மிகவும் சிறப்பான அபரிதமான ஆட்டத்திறனில் இருப்பது கூடுதல் பலம். அதனை தொடர்ந்து மிகவும் அனுபவமான ஹபீஸ் மற்றும் சொய்ப் மாலிக் நிலமைக்கு ஏற்றவாறு நிதானமாகவும் அதிரடியாகவும் ஆகக்கூடிய வீரர்கள். அதனை தொடர்ந்து அண்மையில் தனது மகளை புற்றுநோயால் பறிகொடுத்த அதிரடியான ஆசிப் அலி, அணித்தலைவர் சப்ராஸ் அகமட், இமாட் வசீம்,சதாப் கான் என பலமான ஆட்டக்காரர்கள். பாகிஸ்தானும் உலகக் கோப்பையை எதிர்கொள்ள நீண்ட பலமான துடுப்பாட்ட வரிசையுடன் காத்திருக்கிறது. பாகிஸ்தானின் பலமே எப்பொழுதும் அவர்களின் பந்துவீச்சு தான். இம்முறையும் சிறப்பான பந்துவீச்சு கூட்டணியுடன் களம் இறங்குகிறது பாகிஸ்தான். அனுபவமான அமீர், வகாப் ரியாஸ், ஹசன் அலி, புதிய வரவுகளான வேக இளவல்கள் மொகமட் ஹசனின், சகீன் அப்ரிடி, சுழலில் துல்லியமான இமாட் வசீம், சதாப் கான் அனுபவ ஹபீஸ் என பலமான பந்துவீச்சாளர்கள். இங்கிலாந்து மண்ணில் பெரிய தொடர்களில் அசத்த பாகிஸ்தானியர்கள் தவறியதே இல்லை. 1992 இல் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அதற்கு ஒப்பான ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த உலகக் கோப்பையையும் கைப்பற்றுவார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

தென்னாப்பிரிக்க

Related image

சர்வதேச கிரிக்கெட் அரங்கின் துரதிர்ஷ்டம் இந்த தென்னாப்பிரிக்கர்கள். பெரிய தொடர்களில் மழைக்கும், டக்வேர்த் லூயிஸ் க்கும் பலியாவது இவர்களின் சாபக்கேடு. அழுத்தம் அதிகமான ஆட்டங்களில் சாதிக்க தவறுவதும், இலகுவான பிழைகளை விடுவதும் கை வந்த கலை இவர்களுக்கு. இதற்கு சிறந்த உதாரணம் கடந்த உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டம். இதனால் தான் சிறப்பான அணியாக இருந்தும் “chokers” என்ற நாமத்தை பெற்றிருக்கிறார்கள். இம்முறையும் அந்த துரதிர்ஷ்டம் துரத்தாதவிடத்து சாதிக்கலாம். கடந்த வருடம் உலகின் அற்புதமான மட்டையாளர் டி விவ்லியர்ஸ் தனது 34 ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து அதிர்ச்சி தந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து ஓரளவுக்கு இந்த தென்னாபிரிக்கர்கள் மீண்டு இருக்கிறார்கள் என்றாலும் அந்த மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்புவது என்பது இயலாத காரியம். அது ஒரு புறம் இருக்க துடுப்பாட்டம் சரி, பந்துவீச்சு சரி சமபலமான அணியாக உலகக் கோப்பையை நோக்கி நகர காத்திருக்கிறது தென்னாப்பிரிக்கா. கிரிக்கெட் அரங்கில் பல உன்னதமான களத்தடுப்பாளர்களையும் தருவித்த அணி. கிரிக்கெட் அரங்கில் களத்தடுப்பிற்காக ஒரு வீரர் ஆட்டநாயகன் விருதை பெறுகிறார் என்றால் அது சாதாரண விடயமல்ல. இரண்டு தடவைகள் இவ்வாறு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இரண்டு தடவைகளுக்கும் சொந்தக்காரர்கள் தென்னாப்பிரிக்கர்கள். ஒருவர் ஜொன்டி ரோட்ஸ் மற்றையவர் டேவிட் மில்லர்.
துடுப்பெடுத்தாட்டத்தில் ஆரம்ப இணை ஹசிம் அம்லா- டி கொக் ஜோடி, கடந்த பல ஆண்டுகளாக சிறப்பான ஒரு ஆரம்ப இணைப்பை அணிக்கு வழங்கி கொண்டு இருக்கிறார்கள். இருவருமே நிலமைக்கு ஏற்றவாறு நிதானமாகவும், அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடிய கூடியவர்கள். அடுத்து அணித்தலைவர் டு ப்ளஸிஸ், சிறந்த மட்டையாளர். பொறுப்பான பல இன்னிங்ஸ் களிற்கு உரியவர். இத்தொடரிலும் அசத்துவார். அடுத்த இலக்கத்தில் புதியவர் என்றாலும் அண்மைக்காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வண்டர் டுஸன். தொடர்ந்து அனுபவமான டுமினி மற்றும் அதிரடியான மில்லர் என பலமான ஆட்டக்காரர்கள். தென்னாப்பிரிக்காவை அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஓட்ட எண்ணிக்கைக்கு அழைத்து செல்வார்கள் என நம்பலாம். இந்த ஆபிரிக்கர்கள் எப்பொழுதும் வேகப்பந்து வீச்சில் மிகவும் ஆபத்தானவர்கள். அனுபவ டேல் ஸ்டெய்ன், ரபடா,நெகிடி என இரண்டு இளம் வேகப்புயல்கள். அத்தோடு மொரிஸ்,பெலுக்வயோ, பிறிற்ரோறியஸ் என வேகப்பந்து வீசும் மூன்று சகலதுறை வீரர்கள். வயதானாலும் சுழலில் கலக்கும் இம்ரான் தகீர் என அட்டகாசமான பந்துவீச்சாளர்கள். பார்க்கலாம் தங்கள் மேல் இருக்கும் “unlucky” என்ற tag ஐ உடைத்து கன்னி உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவார்களா தென்னாப்பிரிக்கர்கள் என்று.

நியூசிலாந்து

Image result for new zealand world cup 2019 team

கடந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியாளர்கள். ஆனாலும் சிறப்பான, பலமான அணியாக இருந்தும் பெரிய தொடர்களில் சோடை போவதில் இவர்கள் தென்னாப்பிரிக்கர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் சிறப்பாக துடுப்பெடுத்தாடக்கூடிய மட்டையாளர்கள், வேகமான பந்துவீச்சாளர்கள் என பலமான அணியாக மீண்டும் ஒருமுறை கன்னிக் கிண்ணக்கனவுடன் உலகக் கோப்பையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள் இந்த கறுப்பு சட்டைகள். ஆரம்ப ஜோடி முன்ரோ- குப்தில் இருவருமே அதிரடியில் அதகளம் பண்ணக்கூடிய ஆட்டக்காரர்கள். அத்தோடு குப்தில் பெரிய இன்னிங்ஸ்களை ஆடக்கூடியவரும் கூட. மூன்றாம் இலக்கத்தில் உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் அணித்தலைவர் வில்லியம்சன். பொறுப்பான ஆட்டத்தால் அணியை ஸ்திரப்படுத்துவார். தொடர்ந்து ஆபத்தான அனுபவ ரொஸ் டெய்லர், கென்றி நிக்கோல்ஸ், அதிரடி காட்டக்கூடிய வேகப்பந்து வீச்சிலும் அசத்த கூடிய ஜேம்ஸ் நீசம், கிராண்ட்ஹோம் என அடுத்தடுத்து இரு அதிரடி ஆட்டக்காரர்கள் என பலமான துடுப்பாட்டவரிசை. பந்துவீச்சிலும் சளைத்தது அல்ல நியூசிலாந்து. சவுத்தி, போல்ட் இருவருமே நீண்ட காலமாக நியூசிலாந்து அணிக்காக ஆரம்ப பந்துவீச்சு ஜோடியாக பந்துவீசிக்கொண்டு இருப்பவர்கள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இருவருமே அசத்துவர். அத்தோடு பெர்குசன், மட் ஹென்றி என வேகங்கள். இஷ் சோதி, சண்ட்னர் என்று இரண்டு சுழல் பந்து வீச்சாளர்கள். இவர்களை விட அதிகமாக கவனிக்க வேண்டிய விஷயம். ரொம் பிளண்டல் என்ற ஒரு புதியவர் அணிக்குள் உள்வாங்கப்பட்டு இருப்பதுவே. இலக்கு காப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இவர் ஏற்கனவே இலக்கு காப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ரொம் லேதம், ஹென்றி நிக்கோல்ஸ் இருவருக்கும் மேலாக அணியில் உள்வாங்கப்படுவாரா என்ற கேள்வி எழாமலும் இல்லை. இவர் அணிக்கு எந்த வகையில் உதவ போகிறார் என்பது புதிரே. அணித்தலைமையிலும் அணித்தெரிவிலும் அசத்தும் கேன் வில்லியம்சன் தனது நாட்டுக்கான கன்னி உலகக் கோப்பையை பெற்றுக் கொடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

இலங்கை

Image result for srilanka world cup 2019 team

2014 ஆம் ஆண்டு வரை சர்வதேச தொடர்களில் அரையிறுதி அல்லது இறுதி போட்டி என தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு இருந்த ஒரு அணி. சிரேஸ்ட வீரர்களான ஜெயவர்த்தன, சங்கக்காரா இருவரினதும் ஓய்வின் பின்னர் பல பின்னடைவுகளை சந்தித்து இந்த உலகக் கோப்பையின் கவனிக்க தேவையற்ற அணியாக அதாவது “Under dogs” என்ற நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயமே. ஆனாலும் இந்த ஆசிய சிங்கங்களை அவ்வளவு குறைவாக மதிப்பிடவும் முடியாது. ஆனாலும் புள்ளிவிவரங்கள் இலங்கை அணிக்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை. கடந்த மே மாதத்தின் பின்னரான ஓராண்டு காலத்தில் ஒருநாள் போட்டிகளில் அணிகள் பெற்றுக் கொண்ட வெற்றிகள் வரிசையில் ஒழுங்குபடுத்தின் இலங்கை அணி முதல் பத்து அணிகளுக்குள் கூட இல்லாத நிலையில் இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக பல சோதனை முயற்சிகளை மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் சபை இந்த உலகக் கோப்பையிலும் ஒரு நம்பகமான அணியை தயார் செய்ய தவறி இருக்கிறது தான் சொல்ல வேண்டும். பல அணித்தலைவர்களை முயற்சி செய்த இலங்கை கிரிக்கெட் சபை உலகக் கோப்பைக்கான அணித்தலைவராக புதியவர் அத்தோடு வெறுமனே 17 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கின்ற திமுத் கருணாரட்ணவை நியமித்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது என்றாலும் மிகையாகாது. உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் அனுபவம் குறைந்த ஒரு புதிய அணித்தலைவர் அணியை வழிநடத்துவது என்பது மிகவும் கடினமான காரியம். அத்தோடு இன்னும் இலங்கை அணி துடுப்பாட்ட வரிசையில் எந்த வீரர் எந்த இலக்கத்தில் ஆட போகிறார் என்ற முடிவையும் எடுத்ததாக தெரியவில்லை. ஆனால் ஆரம்ப வீரராக கருணாரட்ண களம் இறங்க போகிறார் என்பது உறுதியான விடயம். இது இலங்கை அணி ஆரம்ப இலக்குகளை இழப்பதை இது தடுக்கும். அதற்கு ஏற்றாற்போல் கருணாரட்ண ஓட்டங்களை வேகமாக குவிக்காது போனாலும் துடுப்பாட்டத்தின் இன்னிங்ஸ் முழுவதும் ஒரு புறத்திலே ஆடி ஏனைய வீரர்களுடன் இணைப்பாட்டங்களை ஏற்படுத்துவாராயின் அதுவே இலங்கை ரசிகர்களும், இலங்கை கிரிக்கெட் சபையும் அவரிடம் இருந்து எதிர்பார்க்கும் பெரிய விசயமும் கூட. இருப்பினும் மத்தியூஸ் தவிர நம்பிக்கை தரக்கூடிய துடுப்பாட்டக்காரர் என்று குறிப்பிட்டு சொல்லும் படி எவரும் தொடர்ச்சியாக ஓட்டங்களை குவிக்க கூடியவர்கள் இல்லை. ஏனையவர்கள் ஓரிரு போட்டிகளில் அசத்தலாம். துடுப்பாட்டத்தை காட்டிலும் பந்துவீச்சு ஓரளவு பலம் எனலாம். அனுபவமான மலிங்க, லக்மால், நுவன் பிரதீப், அண்மைக்காலமாக சிறப்பாக பந்துவீசி வரும் உதான என வேகப்பந்து வீச்சில் ஓரளவு சாதிக்க கூடிய பந்துவீச்சாளர்கள். சுழல் பந்து வீச்சாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஜீவன் மெண்டிஸ், ஜெப்றி வண்டர்சே, சிறீவர்த்தன மூவருமே அண்மைக்காலமாக இலங்கை அணிக்காக அதிகளவில் ஒரு நாள் போட்டிகளில் ஆடாதவர்களாகவே இருக்கிறார்கள். அதிக போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்ட அகில தனஞ்செய, லக்சன் சண்டகன் இவர்களோடு ஆரம்ப அதிரடி ஆட்டக்காரரும் இலக்கு காப்பாளருமான டிக்வெல, உப்புல் தரங்க ஆகியோர் அணித்தெரிவில் ஓரங்கட்டப்பட்டு இருப்பதோடு பெரிய தொடர் ஒன்றிற்கு ஏற்கனவே அணியை சிறப்பாக வழிநடத்திய மத்தியூஸ்,மலிங்க ஆகியோர் அணியில் இருந்தும் புதியவர் ஒருவர் அணித்தலைவராக அறிவிக்கப்பட்டமை இலங்கை கிரிக்கெட் சபையில் விளையாட்டை கடந்து அரசியலும் செல்வாக்கு செலுத்த தொடங்கி விட்டதை உறுதிப்படுத்தாமல் இல்லை. எது எவ்வாறு இருப்பினும் இலங்கை அணி இந்த உலகக் கோப்பைக்கான பந்தயத்தில் பின்தங்கியே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

2014 ஆம் ஆண்டு வரை சர்வதேச தொடர்களில் அரையிறுதி அல்லது இறுதி போட்டி என தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு இருந்த ஒரு அணி. சிரேஸ்ட வீரர்களான ஜெயவர்த்தன, சங்கக்காரா இருவரினதும் ஓய்வின் பின்னர் பல பின்னடைவுகளை சந்தித்து இந்த உலகக் கோப்பையின் கவனிக்க தேவையற்ற அணியாக அதாவது “Under dogs” என்ற நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயமே. ஆனாலும் இந்த ஆசிய சிங்கங்களை அவ்வளவு குறைவாக மதிப்பிடவும் முடியாது. ஆனாலும் புள்ளிவிவரங்கள் இலங்கை அணிக்கு சாதகமாக இல்லை என்பதே உண்மை. கடந்த மே மாதத்தின் பின்னரான ஓராண்டு காலத்தில் ஒருநாள் போட்டிகளில் அணிகள் பெற்றுக் கொண்ட வெற்றிகள் வரிசையில் ஒழுங்குபடுத்தின் இலங்கை அணி முதல் பத்து அணிகளுக்குள் கூட இல்லாத நிலையில் இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக பல சோதனை முயற்சிகளை மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் சபை இந்த உலகக் கோப்பையிலும் ஒரு நம்பகமான அணியை தயார் செய்ய தவறி இருக்கிறது தான் சொல்ல வேண்டும். பல அணித்தலைவர்களை முயற்சி செய்த இலங்கை கிரிக்கெட் சபை உலகக் கோப்பைக்கான அணித்தலைவராக புதியவர் அத்தோடு வெறுமனே 17 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கின்ற திமுத் கருணாரட்ணவை நியமித்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது என்றாலும் மிகையாகாது. உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் அனுபவம் குறைந்த ஒரு புதிய அணித்தலைவர் அணியை வழிநடத்துவது என்பது மிகவும் கடினமான காரியம். அத்தோடு இன்னும் இலங்கை அணி துடுப்பாட்ட வரிசையில் எந்த வீரர் எந்த இலக்கத்தில் ஆட போகிறார் என்ற முடிவையும் எடுத்ததாக தெரியவில்லை. ஆனால் ஆரம்ப வீரராக கருணாரட்ண களம் இறங்க போகிறார் என்பது உறுதியான விடயம். இது இலங்கை அணி ஆரம்ப இலக்குகளை இழப்பதை இது தடுக்கும். அதற்கு ஏற்றாற்போல் கருணாரட்ண ஓட்டங்களை வேகமாக குவிக்காது போனாலும் துடுப்பாட்டத்தின் இன்னிங்ஸ் முழுவதும் ஒரு புறத்திலே ஆடி ஏனைய வீரர்களுடன் இணைப்பாட்டங்களை ஏற்படுத்துவாராயின் அதுவே இலங்கை ரசிகர்களும், இலங்கை கிரிக்கெட் சபையும் அவரிடம் இருந்து எதிர்பார்க்கும் பெரிய விசயமும் கூட. இருப்பினும் மத்தியூஸ் தவிர நம்பிக்கை தரக்கூடிய துடுப்பாட்டக்காரர் என்று குறிப்பிட்டு சொல்லும் படி எவரும் தொடர்ச்சியாக ஓட்டங்களை குவிக்க கூடியவர்கள் இல்லை. ஏனையவர்கள் ஓரிரு போட்டிகளில் அசத்தலாம். துடுப்பாட்டத்தை காட்டிலும் பந்துவீச்சு ஓரளவு பலம் எனலாம். அனுபவமான மலிங்க, லக்மால், நுவன் பிரதீப், அண்மைக்காலமாக சிறப்பாக பந்துவீசி வரும் உதான என வேகப்பந்து வீச்சில் ஓரளவு சாதிக்க கூடிய பந்துவீச்சாளர்கள். சுழல் பந்து வீச்சாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஜீவன் மெண்டிஸ், ஜெப்றி வண்டர்சே, சிறீவர்த்தன மூவருமே அண்மைக்காலமாக இலங்கை அணிக்காக அதிகளவில் ஒரு நாள் போட்டிகளில் ஆடாதவர்களாகவே இருக்கிறார்கள். அதிக போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்ட அகில தனஞ்செய, லக்சன் சண்டகன் இவர்களோடு ஆரம்ப அதிரடி ஆட்டக்காரரும் இலக்கு காப்பாளருமான டிக்வெல, உப்புல் தரங்க ஆகியோர் அணித்தெரிவில் ஓரங்கட்டப்பட்டு இருப்பதோடு பெரிய தொடர் ஒன்றிற்கு ஏற்கனவே அணியை சிறப்பாக வழிநடத்திய மத்தியூஸ்,மலிங்க ஆகியோர் அணியில் இருந்தும் புதியவர் ஒருவர் அணித்தலைவராக அறிவிக்கப்பட்டமை இலங்கை கிரிக்கெட் சபையில் விளையாட்டை கடந்து அரசியலும் செல்வாக்கு செலுத்த தொடங்கி விட்டதை உறுதிப்படுத்தாமல் இல்லை. எது எவ்வாறு இருப்பினும் இலங்கை அணி இந்த உலகக் கோப்பைக்கான பந்தயத்தில் பின்தங்கியே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

மேற்கு இந்தியா

Image result for westindies world cup 2019 team

முதல் இரண்டு உலகக் கோப்பையின் சொந்தக்காரர்கள். மூன்றாவது உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியாளர்கள் என கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கமான அணியாக இருந்த மேற்கு இந்தியா. அந்த ஆதிகத்தை தொலைத்து பல ஆண்டுகளாகி விட்டது. ஆனாலும் T-20 போட்டிகளின் அசைக்க முடியாத ஜாம்பவான்கள் இவர்கள் தான். ஒருநாள் போட்டிகளையும் T-20 ஆட்டங்கள் போன்று ஆடக்கூடிய வல்லமை படைத்தவர்கள் இவர்கள். ஆனாலும் கடந்த ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிகளை பதிவு செய்யவில்லை என்றே சொல்லலாம். ஆனாலும் அண்மையில் ஒருநாள் போட்டிகளின் முதன்மை அணியாக திகழும் இங்கிலாந்து அணிக்கு எதிராக மேற்கு இந்தியாவில் இடம்பெற்ற ஒருநாள் தொடரை 2-2என சமப்படுத்தி இருந்தது மேற்கு இந்தியா. அத்தோடு கிறிஸ் கெய்ல், மற்றும் அண்மையில் நிறைவுக்கு வந்த ஐ.பி.எல் தொடரின் தொடர் நாயகன் அதிரடியான சகலதுறை ஆட்டக்காரர் ரசல் ஆகியோர் அணியில் இணைந்து இருப்பது கூடுதல் பலம். கடந்த மே மாதம் ஐந்தாம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலாவது விக்கெட்டுக்காக சாதனை இணைப்பாட்டமாக 365 ஓட்டங்களை குவித்து இருந்தது சாய் ஹோப்- கம்ப்பெல் ஜோடி. ஆனாலும் உலகக் கிண்ண அணியில் கம்ப்பெல் இணைக்கப்படவில்லை. எனவே ஆரம்ப ஜோடியாக கிறிஸ் கெய்ல் மற்றும் எவின் லூயிஸ் இருவருமே களம் இறங்க போகிறார்கள். இருவருமே அதிரடியில் ஒருவரை ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. ஆனாலும் இம்முறை கெய்ல் நிதானமான அதிரடியை காட்டுவார் என நம்பலாம். மூன்றாம் இலக்கத்தில் அண்மைக்காலமாக மேற்கு இந்தியாவுக்காக சிறப்பாக ஆடி வரும் சாய் ஹோப் ஆடுமிடத்தில் அணியை சிறந்த ஓட்டப்பெறுதிக்கு அழைத்து செல்வார் என நம்பலாம். அடுத்து டரன் ப்ராவோ, ஹெட்மயர், ரசல், பரத்வெய்ட், அணித்தலைவர் ஹோல்டர் என ஒரு அதிரடியான T-20 package ஓடு காத்திருக்கிறது மேற்கு இந்தியா. பந்து வீச்சில் சொல்லிக்கொள்ளும்படியான வீரர்கள் இல்லை என்றாலும் கப்ரியல், ஒசேன் தோமஸ், கொட்ரியல், கீமர் ரோச் என ஓரளவு சிறப்பாக பந்துவீச கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரே ஒரு சுழல் பந்து வீச்சாளராக அறிவிக்கப்பட்டுள்ள அஸ்லி நர்ஸ் என மேற்கு இந்தியா ஒரு அதிரடிப்படையுடன் உலகக் கோப்பையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். ஒரு சில ஓவர்களிலேயே போட்டியை தமக்கு சாதகமாகவும், பாதகமாகவும் மாற்றக்கூடிய சர்வ வல்லமை பொருந்தியவர்கள் இவர்கள் தான். உலகக் கோப்பையை வெல்லாது போயினும் சர்வதேச கிரிக்கெட் இரசிகர்களை குஷிப்படுத்த தவற மாட்டார்கள் என நம்பலாம்.

பங்களாதேஷ்

Related image

அண்மைக்காலமாக சிறப்பாக ஆடி வரும் ஆசிய அணி. ஆனாலும் முன்னணி அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து உலகக் கோப்பையை கைப்பற்றுவது என்பது ஐயமே. ஆனாலும் ஒரு சில அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை. 2007 இல் இந்திய அணிக்கும், 2015 இல் இங்கிலாந்து அணிக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர்கள் இந்த வங்கப்புலிகள். அதற்கு ஏற்றாற்போல் அனைத்து அணிகளுக்கும் பெரிய நெருக்கடிகளை கொடுப்பார்கள் என நம்பலாம்.அண்மையில் அயர்லாந்தில் நிறைவடைந்த பங்களாதேஷ், அயர்லாந்து,மேற்கு இந்தியா மோதிய முத்தரப்பு தொடரை வென்ற உற்சாகத்தோடு களம் காண்கிறார்கள் இந்த வங்கப்புலிகள். ஆரம்ப ஆட்டக்காரர் தமிம் இக்பால் பங்களாதேஷ் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர். அந்நிய மண்ணிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாட கூடிய மட்டையாளர். இவருக்கு ஜோடியாக களம் இறங்கும் லிட்டன் தாஸ் ம் பங்களாதேஷ்க்காக சிறப்பாக ஓட்டங்களை குவித்து வருவது பலம். உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் மூன்றாம் இலக்கத்தில் அணியின் பிரதான துடுப்பாட்ட வீரர் ஆடுவது கூடுதல் பலம். அதற்கு ஏற்றாற்போல் அண்மையில் நடைபெற்ற முத்தரப்பு தொடர் முழுவதும் சகிப் அல் ஹசன் மூன்றாம் இலக்கத்தில் துடுப்பாடி ஓட்டங்களை குவித்தது பங்களாதேஷ் அணிக்கு மகிழ்ச்சியான விடயமே. அவரை தொடர்ந்து முஸ்பிகர் ரகிம், மகமுதுல்லா, அதிரடியாக ஆகக்கூடிய சபிர் ரஹ்மான் என பங்களாதேஷ் அணியும் சிறப்பாக தம்மை உலகக் கிண்ணத்துக்காக தயார் படுத்தி இருக்கிறது. பந்துவீச்சில் அச்சுறுத்தும்படியான பந்துவீச்சாளர்கள் இல்லை என்றாலும் அணித்தலைவர் மஷ்ரபே மோட்டர்சா, முஸ்தாபிசர் ரஹ்மான், ருபல் குசெய்ன் மற்றும் புதியவர் அபு ஜையத் என ஓரளவு சிறப்பாக பந்துவீச கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள். சுழல் பந்தில் துல்லியமாக பந்து வீசக்கூடிய சகலதுறை ஆட்டக்காரர் சகிப் அல் ஹசன், மற்றும் மெகதி ஹாசன் என பந்துவீச்சிலும் குறைசொல்ல முடியாத அணியாகவே இருக்கிறது பங்களாதேஷ். ஆனாலும் உலகக் கோப்பையை வெல்வது என்பது அசாத்தியமே.

ஆப்கானிஸ்தான்

Image result for afghanistan world cup 2019 team

பங்களாதேஷ் அணிக்கு போட்டியாக இவர்களும் பெரிய அணிகளுக்கு சவாலாகவும், பல அதிர்ச்சி வைத்தியங்களையும் கொடுப்பார்கள் என உறுதியாக நம்பலாம். ஆனால் உலகக் கோப்பையை வெல்வது கடினமே. மொட் நபி, அஸ்கர் அப்கான் என இரண்டு முன்னாள் அணித்தலைவர்களுடன் குலாப்தீன் நய்ப் இன் தலைமையில் இந்த தொடரின் “dark horses” ஆக களம் இறங்குகிறது ஆப்கானிஸ்தான். அதாவது இவர்களின் பலம், பலவீனம் என அவ்வளவு விடயங்கள் இன்னும் அலசப்படாமல் சரியாக கணிக்கப்பட முடியாத ஒரு அணியாக களம் காண்கிறார்கள். ஆனாலும் உலகக் கோப்பை வரை இவர்களின் பயணம் அமையாது என நம்பலாம். ஆரம்ப ஜோடி மொகமட் செசாட், ஷஷாய் ஜோடி அண்மையில் அயர்லாந்து அணிக்கு எதிரான T-20 போட்டியில் ஆரம்ப விக்கெட்டுக்காக சாதனை இணைப்பாட்டமாக 236 ஓட்டங்களை குவித்தது. இருவருமே அதிரடியான துடுப்பாட்டக்காரர்கள். சர்வதேச கிரிக்கெட் கடந்து ஏனைய தொடர்களிலும் அசத்தி கொண்டு இருக்கும் மொகமட் நபி, சுழல் மாயாவி ரசீட் கான், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சாதிக்க கூடியவர்கள். இவர்களை விட ரஹ்மட், சகிடி, அணித்தலைவர் மொகமட் நய்ப் ஆகியோரும் துடுப்பாட்டத்தில் கைகொடுக்க கூடியவர்கள். பந்துவீச்சில் மொகட் நபி, ரசீட் கான், முஜிபுர் ரஹ்மான் மூவரும் சுழலில் அசத்த கூடியவர்கள். ஆனாலும் ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைக்கப்படுமாயின் சாதிப்பார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அத்தோடு பந்துவீச்சில் சட்ரான் மற்றும் அணித்தலைவர் நய்ப் ஆகியோரும் கைகொடுப்பர். முன்னரே குறிப்பிட்டது போன்று ஆப்கானிஸ்தான் எந்தெந்த அணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த போகிறார்கள் அல்லது எந்தெந்த அணிகள் ஆப்கானிஸ்தானிடம் சரணடைய போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

இங்கிலாந்து மைதானங்கள் ஏனைய மைதானங்களை விட அளவு பிரமாணத்தில் வித்தியாசமானவை. பெரும்பாலான மைதானங்கள் செவ்வக அமைப்பை கொண்டவை. இதனால் களத்தடுப்பின் போது எல்லைக்கோட்டில் இருக்கும் வீரர்கள் அதிகளவான பிரதேசத்தை களத்தடுப்பு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே இந்த உலகக் கோப்பையில் சிறப்பான வேகமான களத்தடுப்பும் வெற்றியில் செல்வாக்கு செலுத்தும். அத்தோடு அதிரடியாக துடுப்பெடுத்தாடுவதோடு வேகப்பந்து வீச்சிலும் கைகொடுக்க கூடிய சகலதுறை வீரர்கள் இருப்பது அணிகளுக்கு கூடுதல் பலமாக அமையும். துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமாக ஆடுகளங்கள் அமையுமிடத்து, அதாவது flat pitches அமையுமிடத்து நாணயச்சுழற்சியும் முக்கியமான ஒரு அம்சமாக மாறும். இங்கிலாந்தில் இந்த பருவ காலத்தில் மழையின் குறுக்கீடுகள் போட்டிகளில் நிகழுமாயின் எதிர்பாராத போட்டி முடிவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு பல பிற காரணிகளும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்க உள்ள நிலையில் அடுத்த ஒன்று அரை மாத காலத்திற்கு சர்வதேச கிரிக்கெட் இரசிகர்களை கட்டிப்போட மொத்தமாக 48 போட்டிகளுடன் தயாராக இருக்கிறது இங்கிலாந்து.

இந்த தொடரில் பல சாதனைகள் நிறைவேற்றப்படலாம். பல எதிர்பாராத திருப்பங்கள் வரலாம். ஆனாலும் July 14 இல் ஒரு உலக சம்பியன்கள் உருவாக தான் போகிறார்கள். எனவே இம்முறை கவனிக்கப்பட வேண்டிய நபர்களாக தம்மை மாற்றி இருக்கின்ற வீரர்களை பார்க்கலாம்.

 • பட்லர் – இங்கிலாந்து
 • ஹோலி – இந்தியா
 • வோர்னர் – ஆஸ்திரேலியா
 • பாபர் அசாம் – பாகிஸ்தான்
 • வில்லியம்சன் – நியூசிலாந்து
 • ரசீட் கான் – ஆப்கானிஸ்தான்
 • பும்ப்ரா – இந்தியா
 • ரபடா – தென்னாப்பிரிக்கா
 • ஜோ ரூட் – இங்கிலாந்து
 • டு ப்ளஸிஸ் – தென்னாப்பிரிக்கா

இந்த அலசல்களின் முடிவில் அரையிறுதி ஆட்டங்களுக்குள் தங்களை நிலைநிறுத்த போகும் அணிகள்.

 • இங்கிலாந்து
 • இந்தியா
 • ஆஸ்திரேலியா
 • நியூசிலாந்து

தேவதாஸ் பிரசன்னா

Show More

Related Articles

Close