2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்

2018 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுநாள் 28ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2018 சாதாரண தர பரீட்சையில் நான்கு இலட்சத்து 22 ஆயிரத்து 850 பாடசாலை பரீட்சாத்திகளும் மற்றும் இரண்டு இலட்சத்து 33 ஆயிரத்து 791 தனியார் பரீட்சாத்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.