தேங்காய் தக்காளி சட்னி

தேவையான பொருள்கள்:
வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
தேங்காய் – அரை மூடி
பச்சை மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயத் தூள்
கறிவேப்பிலை
செய்முறை:
வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் வதங்கியவுடன் தேங்காய் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து விட்டு வதக்கியவற்றை சிறிது நேரம் ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி உப்புச் சேர்த்து அரைக்கவும். மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து தாளித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.
அரைத்ததும் தாளித்து வைத்துள்ள பாத்திரத்தில் ஊற்றி கலக்கவும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையான சட்னி தயார்.