ஒபாமாவை கண்கலங்க வைத்த மகள்‍‍..!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மூத்த மகள் மால்யா உயர் நிலைப் பள்ளி படிப்பை முடித்ததையடுத்து நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மூத்த மகள் மால்யா வாஷிங்டனில் உள்ள சிட்வெல் பிரெண்ட்ஸ் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் அவர் தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். அமெரிக்காவில் உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் பட்டமளிப்பு விழா நடைபெறும்.

12-1465714586-obama-0211-600

மால்யாவின் பள்ளியிலும் கடந்த வெள்ளிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் ஒபாமா கலந்து கொண்டார். மகளின் முக்கியமான நாளில் தானும் பங்கு பெற வேண்டும் என்பதற்காக அவர் தனது அலுவல்களை விட்டுவிட்டு பள்ளிக்கு சென்றார்

12-1465714598-obama-11-600

பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுமாறு பள்ளி நிர்வாகம் ஒபாமாவை கேட்டுக் கொண்டது. மேடையில் ஏறி பேசினால் நான் அழுதுவிடுவேன் அதனால் வேண்டாம் என்று கூறி அவர் பேச மறுத்துவிட்டார்.

12-1465714613-obama346

மக்கள் பட்டம் வாங்கியதை பார்த்த ஒபாமா கண்கலங்கிவிட்டார். ஒபாமா அழுததை புகைப்படம் எடுக்க செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒபாமா வெள்ளை மாளிக்கைக்கு முதல்முதலாக தேர்வானபோது மால்யாவுக்கு வயது 10 ஆகும். மால்யாவுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ளது.

12-1465714606-obama23

மால்யா இந்த ஆண்டு சேராமல் 12 மாத இடைவேளை விட்டுவிட்டு அடுத்த ஆண்டு தான் கல்லூரியில் சேர்கிறார். இந்த ஓராண்டு இடைவேளையில் அவர் என்ன செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Leave a Reply

Close