Graphic முறையில் உருவாகும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு.!

அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் வல்லுநராக உலகம் முழுக்க அறியப்பட்ட இயற்பியளாலர் ஸ்டீஃபன் ஹாக்கிங் உடல்நலக் கோளாறு காரணமாக சில மாதங்களுக்கு முன் மரணித்தார். நவீன அறிவியல் மற்றும் அண்டவியல் துறையில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு கிராஃபிக் முறையில் உருவாகியுள்ளது.
ஹாக்கிங் என்ற தலைப்பில் ஜிம் ஒட்டவியானி மூலம் எழுதப்பட்டிருக்கும் புத்தகம் லீலேண்ட் மேரிக் மூலம் தொகுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் அட்டைப் படத்தில் ஹாக்கிங் முகம் பின்னணியில் அண்டம் வரையப்பட்டுள்ளது.
ஒட்டவியானி மற்றும் மேரிக் இணைந்து குவாண்டம் இயற்பியலாளர் ரிச்சர்டு ஃபென்மேன் வாழ்க்கையை கிராஃபிக் புத்தகமாக உருவாக்கினர். இந்த புத்தகம் 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. பின் நியூ யார்க் டைம்ஸ் இன் அதிகம் விற்பனையான புத்தகமாக அறிவிக்கப்பட்டது.
ஃபென்மேன் வாழ்க்கை வரலாற்று கிராஃபிக் தொகுப்பை ஸ்டீஃபன் ஹாக்கிங் விரும்பியதைத் தொடர்ந்து இந்த திட்டம் துவங்கப்பட்டதாக ஒட்டவியானி தெரிவித்தார்.ஹாக்கிங் வாழ்க்கை வரலாற்றை உருவாக்க ஒட்டவியானி மற்றும் மேரிக் இருவரும் ஹாக்கிங்கை சந்தித்து பேசியதாக அவர் மேலும் தெரிவித்தார். வாய்ப்பு கிடைத்ததும், அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்ததாக ஒட்டவியானி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். ஸ்டீஃபன் ஹாக்கிங் தனது 76-வது வயதில் உயிரிழந்தார், முன்னதாக தனது 21-வது வயதில் ஹாக்கிங்கிற்கு நரம்பியல் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சமயங்களில் தான் சில ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும் என ஹாக்கிங் அவ்வப்போது கூறி வருவார், எனினும் தனது எதிர்பார்ப்புகளை கம்ப்யூட்டர் குரல் மற்றும் சக்கரநாற்காலியில் இருந்த படி எதிர்த்து வந்தார். அடுத்த சில தசாப்தங்களில் 20-ம் நூற்றாண்டின் மிகப்பெரும் அறிவியல் வல்லுநராக உருவெடுத்தார், மேலும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அறிவியலாளராக விளங்கினார்.
ஹாக்கிங் கதையை வரலாறு, நகைச்சுவை மற்றும் சோகம் உள்ளிட்டவற்றை கலந்து கிராஃபிக் நாவல் மூலம் வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என ஒட்டவியானி தெரிவித்தார்.