சே குவேராவின் ஓவியம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி

உலகெங்கிலும் இளைஞர்களின் படுக்கை அறைகளை இன்றும் அலங்கரிக்கும் புரட்சியாளன் சே குவேராவின் ஓவியம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது.

1960களில் சே குவெராவுடன் இருந்த கியூப புகைப்பட கலைஞரான அல்பேர்டோ கோர்டா எடுத்த புகைப்படத்தின் அடிப்படையில் அயர்லாந்தை சேர்ந்த ஜிம் ஃபிட்பற்றிக்ஸ் என்பவர் விளம்பர சுவரொட்டி ஒன்றை வரைந்திருந்தார்.

1968 களில் வரையப்பட்ட இந்த ஓவியம் 50 ஆண்டுகளை கடந்தும் இன்றும் உலா வருகின்றது.

ஆரம்பத்தில் இடதுசாரி இயக்கங்களால் இலகுவாக ஏற்கப்பட்ட இந்த ஓவியம், ரி-சேட், விளம்பரங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.

இதனால் கோபமடைந்த ஜிம் ஃபிட்பற்றிக்ஸ், 2010இல் பதிப்புரிமையை பெற்றுக் கொண்டார்.

இது குறித்து கருத்துரைக்கும் ஃபிட்பற்றிக்ஸ், ‘ இந்த ஓவியத்தை ரி-சேட்களில் பயன்படுத்துவது முதலில் என்னை தொந்தரவு செய்யவில்லை. ஆனால் மிகப்பெரிய விளம்பர நிறுவனம் என்னுடைய இந்த படத்தை பயன்படுத்தியது.

இப்படியான வணிக ரீதியான சுரண்டலை நான் வெறுக்கிறேன்’ என் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Close