தனது பிரசவத்துக்கு சைக்கிளில் சென்ற நியூசிலாந்து அமைச்சர்..!

Julie Anne Genter எனும் பெண்மணி நியூசிலாந்து நாட்டின் மகளிர் நலன் துறை அமைச்சராக உள்ளார். கர்ப்பிணியான இவர், தனக்கு பிரசவத்துக்கான நேரம் நெருங்குவதை உணர்ந்து, சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார். ஆக்லாந்து சிட்டி மருத்துவமனைக்கு சென்ற பிறகு தனது வெற்றிகரமான பயணத்தை படமெடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ஜூலி கூறுகையில், “எனக்கு பிரசவ வலி ஏற்படுவதை உணர்ந்த நேரத்தில், உதவிக்கு யாரும் இல்லை. காரும் வீட்டில் இல்லாததால், இருந்த இ-சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். அதில் இருந்த மின் மோட்டார் எனக்கு அதிக சிரமம் கொடுக்கவில்லை. மேலும், வீட்டில் இருந்து மருத்துவமனை இருக்கும் இடம் வரையிலான சாலையும் சற்று பள்ளமானதாகவே இருந்ததால், எளிதாக கடந்துவந்துவிட்டேன்” என்றார்.

”பொதுவாக கர்ப்பிணிகளுக்கு, பிரசவ நேரத்தில், ரத்த அழுத்தம் அதிகமாகவும் இதயத் துடிப்பு சீரற்றதாகவும் இருக்கும். ஆனால், ஜுலி தைரியமாக மருத்துவமனை வரை சென்றது பெரும் வியப்பாக இருக்கிறது” என்று அந்நாட்டு மக்கள் பலரும் பாராட்டியுள்ளனர். ஜூலி, மகளிர் நலன் துறை அமைச்சராக மட்டுமின்றி, அந்நாட்டின் போக்குவரத்து துறை இணை அமைச்சராகவும் உள்ளார். இவரும் இவரது கணவரும் அடிக்கடி ‘சைக்கிள்’ பயணம் மேள்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close