காலை முதல் இரவு வரை சொல்ல வேண்டிய சிவ துதிகள்

அவனின்றி ஒரு அணுவும் இந்த உலகில் அசைவது இல்லை. காலை கண்விழித்தது முதல் இரவு தூங்கும் வரையிலான பொழுதுகள் அனைத்திலும் ஈசனின் அருள் நமக்கு கிடைக்க இந்த துதிகளை பாராயணம் செய்யலாம்.

காலையில் எழுந்திருக்கும் போது 

அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி

குளிக்கும் போது 

சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

கோபுர தரிசனம் காணும் போது 

தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது

காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி

நண்பரைக் காணும் போது 

தோழா போற்றி துணைவா போற்றி

கடை திறக்கும் போது 

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

நிலத்தில் அமரும் போது

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

நீர் அருந்தும் போது 

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

அடுப்பு பற்ற வைக்கும் போது 

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

உணவு உண்ணும் போது 

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

மனதில் அச்சம் ஏற்படும் போது 

அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

உறங்கும் போது 

ஆடக மதுரை அரசே போற்றி

கூடல் இலங்கு குருமணி போற்றி

Show More

Related Articles

Close