இங்கிலாந்து அணிக்கு 521 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 521 ஓட்டங்களை இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி (சனிக்கிழமை) நொட்டிங்ஹாம் மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வேற்று பெற்று முதலில் இங்கிலாந்து அணியில் இந்தியாவை துடுப்பெடுத்தாட பணித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணி 329 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 161 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

பின்னர், 3 ஆவது நாளில் தனது 2 ஆவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா அணி 7 விக்கெட்களை இழந்து 352 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதில் இந்திய அணி சார்பில் விராட் கோஹ்லி 103 ஓட்டங்களையும், புஜாரா 72 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். இந்நிலையில் இங்க்லாந்து அணி 521 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Show More

Related Articles

Close