துருக்கி விவகாரத்தில் பின்வாங்கப் போவதில்லை என ட்ரம்ப் தெரிவிப்பு

துருக்கியில் அமெரிக்க போதகர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில், அந்த நாட்டுடனான தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்ற அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
துருக்கியின் இந்த செயல் தனக்கு கவலையளிப்பதாகவும், தமது நாட்டு  போதகரை தடுத்து வைத்துள்ளதன் மூலம் துருக்கி பாரிய தவறை இழைத்துள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அந்த நாட்டுடன் எந்தவொரு விட்டுக் கொடுப்புகளுக்கும் தாம் தயாரில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த துருக்கி பிரஜை ஒருவரை விடுவிப்பதற்காக, இஸ்ரேல் மீது தாம் அழுத்தம் விடுத்ததைத் தொடர்ந்து, துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது நாட்டு போதகரும் விடுதலை செய்யப்படுவார் என்று தாம் எதிர்ப்பார்த்ததாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலைமையின் கீழ்துருக்கிய ஜனாதிபதிக்கு எதிரான ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அமெரிக்க போதகரான புருன்ஸ்டன் மறுத்துள்ளார்.
அமெரிக்க போதகரை விடுவிப்பதற்கு துருக்கி ஜனாதிபதி தையிப் எர்துவான் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், துருக்கியிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் அதிக வரி விதிப்புகளை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Show More

Related Articles

Close