வட­ம­ராட்சி கட­லட்டைப் பிரச்­சினை அமைச்­சர்­க­ளு­டன் இன்று பேச்சு

வெளி மாவட்­டங்­க­ளில் இருந்து வந்து வட­மராட்­சிக் கட­லில் கட­லட்டை பிடிப்­ப­வர்­கள் தொடர்­பான பிரச்­சி­னை­யால் அங்கு ஏற்­பட்­டுள்ள முறு­கல் நிலை பற்றி கடற்­றொ­ழில் நீரி­யல் வளத்­துறை அமைச்­சர் காமினி விஜித் விஜய முனி சொய்சா மற்­றும் பிரதி அமைச்­சர் எம்.எஸ்.அமீர் அலி ஆகி­யோர் மீன­வர்­க­ளு­டன் பேச்சு நடத்த இன்று யாழ்ப்பா­ணம் வரு­கின்­ற­னர்.

அவர்­க­ளு­ட­னான பேச்­சின் பெறு­பே­று­க­ளைப் பொறுத்தே நாளை அரச தலை­வ­ரின் வரு­கை­யின்­போது நடத்­து­வ­தற்­குத் திட்­ட­மி­டப்­பட்ட போராட்­டம் குறித்த முடிவு இறுதி செய்­யப்­ப­டும் என்று மீன­வர்­கள் அறி­வித்­துள்­ள­னர்.

அத்­து­மீறி வட­ம­ராட்­சி­யில் கட­லட்டை பிடிக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக இந்த ஆர்ப்­பாட்­டம் நடத்­தப்­பட இருந்­தது. கடல் அட்­டையை இர­வில் பிடிக்­கக்­கூ­டாது என்­பது உள்­ளிட்ட சில விதி­மு­றை­கள் இறுக்­க­மா­கக் கடைப்­பி­டிக்­கப்­ப­டும் என்று உள்­ளூர் மீன­வர்­க­ளுக்கு அரச பிர­தி­நி­தி­க­ளால் உறு­தி­மொழி வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், அதை மீறி இர­வில் கடல் அட்டை பிடிப்­ப­தற்­கு­ரிய அனு­மதி உள்­ளிட்ட நடை­மு­றை­கள் கடற்­றொ­ழில் நீரி­யல் வளத் திணைக்­க­ளத்­தால் அனு­ம­திக்­கப்­பட்­டன. இதனை அடுத்தே அரச தலை­வ­ரின் வரு­கை­யின் போது பெரு­மெ­டுப்­பில் போராட்­டத்­தில் குதிப்­ப­தற்கு வட­ம­ராட்சி மீன­வர் சங்­கங்­கள் முடி­வெ­டுத்து அறி­வித்­தன.

இந்­தப் பிரச்­சினை தொடர்­பாக இன்று இரவு 7 மணிக்கு யாழ். நக­ரில் உள்ள விடுதி ஒன்­றில் கடற்­றொ­ழில் அமைச்­சர் மற்­றும் பிரதி அமைச்­ச­ரு­ட­னான சந்­திப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது என்று கடற்­றொ­ழி­லா­ளர் சம்­மே­ள­னம் மீன­வர் சங்­கங்­க­ளுக்­குத் தெரி­வித்­ததை அடுத்­துப் போராட்­டம் கைவி­டப்­பட்­டுள்­ள­தாக நேற்­றுத் தெரி­விக்­கப்­பட்­டது.

மீன­வர்­கள் கைது

வட­ம­ராட்சி கிழக்­குக் கடற்­ப­ரப்­பில் அனு­ம­தி­யின்றி கட­லட்டை பிடித்­த­னர் என்று தெரி­வித்­துக் கடற்­ப­டை­யி­ன­ரால் 81 மீன­வர்­கள் கடந்த சனிக்­கி­ழமை அதி­காலை கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளின் 27 பட­கு­க­ளும் கடற்­ப­டை­யி­ன­ரால் கைப்­பற்­றப்­பட்­டன.

ஆனால் அவர்­க­ளி­டம் இர­வில் நீரில் மூழ்­கிக் கட­லட்டை பிடிக்க அனு­மதி உண்டு என்று தெரி­வித்து அன்று மதி­யம் அவர்­கள் கடற்­ப­டை­யி­ன­ரால் விடு­விக்­கப்­பட்­ட­னர். ரோந்­துப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த கடற்­ப­டை­யி­னரே இவர்­க­ளைக் கைது செய்­த­னர்.

அவர்­க­ளின் பட­கு­கள்,தொழில் உப­க­ர­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்­டன. அவர்­கள் கரைக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுக் கடற்­படை முகா­மில் தடுத்து வைக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனி­னும் மதி­ய­ம­ள­வில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் கட­லட்டை பிடிப்­ப­தற்­கான அனு­மதி உள்­ளது என்று தெரி­வித்­த­னர். அதை­ய­டுத்து அவர்­கள் விடு­விக்­கப்­பட்­ட­னர்.

அத­னால் அந்­தப் பகுதி மீன­வர் அமைப்­புக்­க­ளும், மீன­வர்­க­ளும் கொதிப்­ப­டைந்­த­னர். கடற்­படை முகாம் முன்­பா­கக் கூடி வாதிட்­ட­னர். போராட்­டத்­துக்­கான அறி­விப்­பை­யும் விடுத்­த­னர்.

போராட்­டம் இல்லை

இந்த நிலை­யில் அரச தலை­வர் வர­வின்­போது நடத்­தப்­ப­ட­வி­ருந்த போராட்­டம் தற்­கா­லி­க­மாக இடை­றுத்­தப்­பட்­டுள்­ளது என்று வட­ம­ராட்சி கடற்­றொ­ழில் சமா­சத் தலை­வர் வர்­ண­கு­ல­சிங்­கம் நேற்று உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­தார்.

‘‘இன்று மீன்­பிடி அமைச்­ச­ரு­டன் பேச்சு நடத்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. கடற்­றொ­ழில் சம்­மே­ள­னத்­தால் இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அதில் முடிவு எட்­டப்­ப­டா­விட்­டால் பெரும் போராட்­ட­துக்கு ஏற்­பாடு செய்­யப்­ப­டும். நாளை இரவு வட­ம­ராட்சி சம்­மே­ள­னத்­துக்­குட்­பட்ட மீன­வர் தொழி­லுக்­குச் செல்­லாது பணி நிறுத்­தம் செய்­கின்­ற­னர். இதுவே இறு­திச் சந்­தர்ப்­பம்’’ என்று அவர் தெரி­வித்­தார்.

வட­ப­குதி கடற்­றொ­ழி­லா­ளர்­கள் ­ட்எதிர்­நோக்­கும் பிரச்­சி­னை­கள் தொடர்­பான இன்று இரவு 7 மணிக்கு யாழ்ப்­பா­ணத்­தில் கலந்­து­ரை­யா­டல் ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது என்று கடற்­றொ­ழி­லா­ளர் சம்­மே­ள­னத் தலை­வர் தெரி­வித்­தார்.

முன்­ன­ரும் சந்­திப்பு

வட­ம­ராட்சி கிழக்­கில் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் தங்­கி­யி­ருந்து கட­லட்டை பிடிப்­பது தொடர்­பாக முன்­ன­ரும் கொழும்­பில் சந்­திப்பு நடந்­தி­ருந்­தது. கொழும்பு அர­சின் மீன்­பிடி அமைச்­ச­ருக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் மீன்­பிடி அமைச்­ச­ருக்­கும் இடையே இந்­தச் சந்­திப்பு நடந்­தது.

பக­லில் மட்­டுமே கட­லட்டை பிடிக்­க­லாம், ஒரு பட­கில் இரு­வர் மட்­டுமே கட­லில் மூழ்­கிக் கட­லட்டை பிடிக்­கச் செல்­ல­லாம், கடற்­க­ரை­யில் இருந்து 5 கிலோ­மீற்­றர் தூரத்­துக்கு அப்­பாலே கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­ட­லாம், லைலா சுருக்கு வலை, லைலா வலை என்­ப­வற்­றைப் பயன்­ப­டுத்த முடி­யாது என்­பது போன்ற கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­ப­டு­வ­தற்கு அதில் விதிக்­கப்­பட்­டன.

காற்­றில் பறந்த வாக்­கு­றுதி

எனி­னும் கடந்த சனிக்­கி­ழமை இரவு வேளை கட­லட்டை பிடித்­த­போதே 81 மீன­வர்­க­ளும் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளி­டம் இர­வில் கட­லட்டை பிடிப்­ப­தற்­கான அனு­மதி இருந்­தது என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

கலந்­து­ரை­யா­ட­லில் தீர்­மா­னிக்­கப்­பட்ட நிபந்­த­னை­களை மீறி உள்­ளூர் மீன­வர்­க­ளுக்கோ, அதி­கா­ரி­க­ளுக்கோ, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கோ தொரி­யா­மல் இந்த அனு­மதி கடந்த 15ஆம் திகதி கொழும்­பில் இருந்து வழங்­கப்­பட்­டுள்­ளது.

Show More

Related Articles

Close