Trending

கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் !

அமெரிக்காவிலிருந்து சிகிச்சையை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளாா்.

மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா சதுக்கத்திலுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு, இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் மனைவியுடன் சென்ற விஜயகாந்த் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த ஜீலை மாதம் முதல், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்ததால், அவரால் கலைஞரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை.

எனினும் தனது முதற்கட்ட சிகிச்சையை முடித்துக் கொண்டு இன்று காலையில் நாடு திரும்பிய விஜயகாந்த், முதலில் கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலித்தினார்.

இந்நிலையில் மீண்டும் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளார் என, தே.மு.தி.க. சார்பில் டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Show More

Related Articles

Close