‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’

அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் தமது போராட்டத்துக்குரிய தீர்வு கிடைக்க வில்லையெனவும் தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது எனவும் ரயில்வே பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட அறிவித்தார்.

இதேவேளை, ஓய்வு பெற்ற ரயில்வே உழியர்களை சேவைக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இவர்களை வைத்து முடியுமான வரை ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.